‘போட்டிக்கு நாங்களும் வரலாமா..?’ யாருமே எதிர்பார்க்காத ட்விஸ்ட்.. புதிய ஐபிஎல் அணிகளை வாங்க சர்ப்ரைஸ் ‘என்ட்ரி’ கொடுத்த ‘பிரபல’ கால்பந்து அணி..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

புதிதாக அறிமுகப்படுத்தப்பட உள்ள ஐபிஎல் அணிகளை வாங்க பிரபல கால்பந்து உரிமையாளர்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2008-ம் ஆண்டு முதல் ஐபிஎல் (IPL) டி20 தொடரை பிசிசிஐ (BCCI) நடத்தி வருகிறது. இதுவரை 8 அணிகள் போட்டியிட்டு வருகின்றன. இந்த சூழலில் அடுத்த ஆண்டு 2 புதிய அணிகளை சேர்க்க உள்ளதாக பிசிசிஐ அறிவித்தது. இந்த புதிய ஐபிஎல் அணிக்கான ஏல விண்ணப்பத்தை அக்டோபர் 20-ம் தேதி வரை பெற்றுக்கொள்ளலாம் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

மேலும் ஏலத்தில் கலந்துகொள்வதற்கான தகுதிகள் குறித்தும் பிசிசிஐ அறிக்கை வெளியிட்டது. அதன்படி ஆண்டுக்கு 3000 ஆயிரம் கோடி வருமானம் ஈட்டும் நிறுவனங்கள் மட்டுமே ஐபிஎல் அணியை வாங்க தகுதியுடவை என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த இரண்டு புதிய அணிகளால் பிசிசிஐக்கு கூடுதலாக 7000 கோடி ரூபாய் வரை வருமானம் வரும் என சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், பிரபல கால்பந்து கிளப்பான மான்செஸ்டர் யுனைடெட் (Manchester United) அணியின் உரிமையாளர்களான அமெரிக்காவைச் சேர்ந்த கிளேசர் குடும்பத்தினர் ( Glazer family), புதிய ஐபிஎல் அணிகளை வாங்க ஆர்வம் காட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான விண்ணப்பத்தையும் அவர்கள் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

வரும் அக்டோபர் 25-ம் தேதி துபாயில் வைத்து இரண்டு புதிய அணிகள் குறித்த தகவலை பிசிசிஐ வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சூழலில் மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்து அணியின் உரிமையாளர்கள் புதிய ஐபிஎல் அணிகளை வாங்க ஆர்வம் காட்டியது கிரிக்கெட் வட்டாரத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்