‘இதை யாருமே எதிர்பார்க்கல’!.. கடைசி டெஸ்ட் நடக்குமா..? நடக்காதா..? இந்திய அணியால் ஏற்பட்ட சிக்கல்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை 4 போட்டிகள் முடிவடைந்துள்ளன. அதில் இந்தியா 2 வெற்றிகளும், இங்கிலாந்து 1 வெற்றியும் பெற்றுள்ளது. இதன்மூலம் 2-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை பெற்று வருகிறது.

அதனால் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றுவிட்டால் தொடரை கைப்பற்ற வாய்ப்புள்ளது. அதேவேளையில் சொந்த மண்ணில் தோல்வி அடையக்கூடாது என இங்கிலாந்து அணியும் வெற்றி பெற முனைப்பு காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ரசிகர்களிடையே இப்போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் இன்று (10.09.2021) மான்செஸ்டர் மைதானத்தில் நடைபெற இருக்கும் கடைசி டெஸ்ட் போட்டி நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதில், இந்திய அணியின் பிசியோதெரபிஸ்ட் நிதின் படேலுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இந்திய கிரிக்கெட் வீரர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முன்னதாக இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மற்றும் பவுலிங் பயிற்சியாளர் பரத் அருண் ஆகியோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அதனால் ஓவல் மைதானத்தில் நடந்த 4-வது டெஸ்ட் போட்டியில் அவர்கள் பங்கேற்கவில்லை. இந்த சூழலில் இந்திய அணியின் பிசியோதெரபிஸ்ட்டுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் இன்று நடைபெறும் இருக்கும் கடைசி டெஸ்ட் போட்டி நடைபெறுமா? என ரசிகர்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது. இதனிடையே இந்திய வீரர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில், அனைவருக்கும் நெகட்டீவ் என வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனால் இன்றைய போட்டி நிச்சயம் நடைபெறும் என கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்