ஆப்ரேஷனின்போது Football மேட்ச் பார்த்த நோயாளி.. ஆனந்த் மஹிந்திரா நெகிழ்ச்சி கமெண்ட்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

கால்பந்து பிரியர் ஒருவர் தனக்கு அறுவை சிகிச்சை நடைபெறும்போதும் FIFA உலகக்கோப்பை போட்டியை பார்த்திருக்கிறார். இந்நிலையில் இந்த புகைப்படத்தை இந்திய தொழிலதிபர்களில் ஒருவரான ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்திருக்கிறார்.

Advertising
>
Advertising

Also Read | என்ன வாய்ஸ்-டா சாமி.. அசத்திய அரசுப்பள்ளி மாணவன்.. பள்ளிக்கல்வி துறை பகிர்ந்த சூப்பர் வீடியோ..!

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட விளையாட்டு கால்பந்து. சாதாரண போட்டிகளுக்கே மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு இருக்கும். அப்படியிருக்க உலகக்கோப்பை என்றால் சொல்லவா வேண்டும்? மத்திய கிழக்கு நாடான கத்தாரில் இந்த ஆண்டுக்கான உலகக்கோப்பை கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த 2018 ஆம் ஆண்டு ரஷ்யாவில் கால்பந்து உலகக்கோப்பை நடைபெற்ற நிலையில், தற்போது கத்தாரில் துவங்கி நடைபெற்று வருகிறது.

இதனால் உலகம் முழுவதும் கால்பந்து ரசிகர்கள் ஏக குஷியில் இருக்கின்றனர். உலகக்கோப்பை கால்பந்து தொடரை முன்னிட்டு அது தொடர்பான பல விஷயங்கள் தற்போது ட்ரெண்டாகி வருகின்றன. இது ஒருபுறம் இருக்க போலந்தை சேர்ந்த நபர் ஒருவர் தனக்கு அறுவை சிகிச்சை செய்யப்படும்போது கால்பந்து போட்டியை காண விரும்பியிருக்கிறார். போலந்தில் உள்ள கீல்ஸ் பகுதியில் இருக்கும் மருத்துவமனையில் இந்த அறுவை சிகிச்சை நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவருக்கு முதுகுத்தண்டில் மயக்கமருந்து செலுத்திய நிலையில் அறுவை சிகிச்சை நடைபெற, உள்ளேயே பொருத்தப்பட்டிருக்கும் தொலைக்காட்சியில் அவர் கால்பந்து போட்டியை பார்த்திருக்கிறார். இதற்காக முன்னரே மருத்துவர்களிடம் அவர் அனுமதி கேட்டதாகவும் தெரிகிறது. நவம்பர் 25 ஆம் தேதி இந்த அறுவை சிகிச்சை நடைபெற்றதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்திருக்கின்றன.

அறுவை சிகிச்சையின்போது அவர் வேல்ஸ் - ஈரான் அணிகளுக்கு இடையேயான போட்டியை பார்த்ததாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த புகைப்படத்தை பகிர்ந்துள்ள இந்திய பணக்காரர்களில் ஒருவரும் தொழிலதிபருமான ஆனந்த் மஹிந்திரா,"ஹாய் FIFA, இந்த நபர் ஏதாவது ஒரு கோப்பைக்கு தகுதியானவர் என உங்களுக்கு தோன்றவில்லையா?" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்நிலையில், இந்த புகைப்படம் சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது. நெட்டிசன்கள்,"மனதை வேறு திசையில் செலுத்த சிறப்பான வழி" எனவும் "இவரோடு சேர்ந்து அந்த மருத்துவர்களுக்கும் ஒரு டிராஃபி கொடுங்கள்" எனவும் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

 

Also Read | கடல், மணல் அப்புறம் பனி.. எல்லாம் ஒரே இடத்துல.. இணையத்தை மீண்டும் ஆக்கிரமித்த போட்டோ.. எங்கப்பா இருக்கு இந்த இடம்.?

ANAND MAHINDRA, MAN, WATCH, FIFA WC, SURGERY, HOSPITAL

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்