‘24 வருட ரண வேதனை’!.. யாருக்கும் இப்படியொரு ‘சோகம்’ வரக்கூடாது.. காண்போரை கலங்க வைத்த சம்பவம்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இரண்டு வயதில் கடத்தப்பட்ட மகனை 24 வருடங்கள் கழித்து தந்தை கண்டுபிடித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் ஷாண்டோங் மாகாணத்தைச் சேர்ந்தவர் குவோ கேங்டாங். கடந்த 1997-ம் ஆண்டு வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த இவரது 2 வயது குழந்தை ஜின்ஷேனை மர்ம நபர்கள் கடத்திச் சென்றுள்ளனர். அன்றிலிருந்து தனது மகனை தேடும் முயற்சியில் குவோ கேங்டாங் ஈடுபட்டு வந்துள்ளார். தான் இறப்பதற்குள் எப்படியாவது மகனை கண்டுபிடித்துவிட வேண்டும் என, சிறுவனின் புகைப்படம் பதித்த கொடியுடன் பைக்கில் சுற்றியுள்ளார்.

24 வருடங்களாக கிட்டத்தட்ட 5 லட்சம் கிலோமீட்டர் குவோ கேங்டாங் பயணம் செய்துள்ளார். இதற்காக இதுவரை 10 பைக்குகளை அவர் வாங்கியுள்ளார். இந்த பயணித்தின்போது பலமுறை விபத்துக்குள்ளாகி எலும்பு முறிவும் ஏற்பட்டுள்ளது. ஆனாலும் தன் மகனை எப்படியாவது கண்டுபிடித்து விட வேண்டும் என்ற வைராக்கியத்தில், தொடர்ந்து தேடி வந்துள்ளார். அப்போது சீனாவில் காணாமல் போனவர்களை தேடும் குழுவுடன் தன்னை இணைத்துக்கொண்டு சிறிது காலம் மகனை தேடி அலைந்திருக்கிறார்.

கடைசியாக சீன பாதுகாப்பு நலவாரியத்தின் உதவியுடன் டிஎன்ஏ சோதனையின் மூலம் தனது மகன் மத்திய சீனாவில் இருப்பதை குவோ கேங்டாங் கண்டுபிடித்துள்ளார். இதனை அடுத்து உடனடியாக தனது குடும்பத்தினருடன் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டுள்ளார். அப்போது 2 வயதில் காணாமல் போன மகன் ஜின்ஷேனை, 24 வருடங்கள் கழித்து இளைஞனாக பார்த்ததும், மகிழ்ச்சியில் மகனை கட்டியணைத்து அழுதது காண்போரை கலங்க வைத்துள்ளது.

இதனைத் தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில், சிறு வயதில் விளையாடிக் கொண்டிருந்த ஜின்ஷேனை ஹூ என்ற ஆணும், டேங் என்ற பெண்ணும் கடத்தி விற்றது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து அந்த இருவரை சீன போலீசார் கண்டுபிடித்து கைது செய்தனர். 2 வயதில் கடத்தப்பட்ட மகனை 24 வருட தேடுதலுக்குப்பின் தந்தை கண்டுபிடித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்