'கிரிக்கெட்டிற்கு குட்பை சொல்லும்'... 'மும்பை அணியின்' செல்ல பிள்ளை'... பயிற்சியாளர் ஆகிறாரா?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இலங்கை வேகப்பந்துவீச்சாளர் மலிங்கா சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற போவதாக அந்த அணியின் கேப்டன் தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் உலகில் யார்க்கர் மன்னன் என அனைவராலும் அழைக்கப்படுபவர் மலிங்கா. முன்னணி வேகப்பந்து வீச்சாளரான இவரின் பந்து வீச்சிற்கு தடுமாறாத வீரர்களே இல்லை என கூறலாம். 36 வயதான இவர் சமீபத்தில் நடந்த உலகக்கோப்பை போட்டியில் இலங்கை அணி லீக் சுற்றிலேயே தோல்வி அடைந்து வெளியேறியது. இதையடுத்து அவர் தனது ஓய்வை அறிவிப்பார் என தகவல்கள் வந்த வண்ணம் இருந்தது.

இந்நிலையில் இலங்கை வந்துள்ள பங்களாதேஷ் அணி அங்கு சுற்றுப்பயணம் செய்து விளையாட உள்ளது. இரு அணிகளும் பங்கேற்கும் முதல் போட்டி வரும் 26 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் விளையாடும் மலிங்கா, அந்த போட்டியோடு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற இருப்பதாக, இலங்கை அணியின் கேப்டன் கருணாரத்னே நேற்று தெரிவித்தார். ஓய்வுக்கு பின்பு மலிங்கா ஆஸ்திரேலியாவில் குடியேற இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே ஓய்வுக்கு பின் அவர் பயிற்சியாளர் பணியை தொடங்க உள்ளதாக, அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஐ.பி.எல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வரும் மலிங்கா, அந்த அணியின் ஆஸ்தான வீரராக திகழ்கிறார். 225 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள மலிங்கா, 335 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.

CRICKET, SRILANKA, MUMBAI-INDIANS, LASITH MALINGA, RETIRE, DIMUTH KARUNARATNE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்