அஸ்வின் மாதிரியே பந்துவீசிய இளம் வீரர்.. அஸ்வினை நேர்ல பார்த்ததும் செஞ்ச நெகிழ வைக்கும் காரியம்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளரான அஷ்வினை சந்தித்திருக்கிறார் இளம் வீரர் மஹேஷ் பிதியா.
Images are subject to © copyright to their respective owners.
Also Read | பிறந்தநாளில் மாணவிக்கு அடிச்ச ஜாக்பாட்.. அடுத்து நடந்ததுதான் ஹைலைட்..!
நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான ஒரு நாள் தொடர் மற்றும் டி 20 தொடரை சிறப்பாக முடித்துள்ள இந்திய கிரிக்கெட் அணி, அடுத்ததாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் விளையாட உள்ளது. 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி தொடர் மற்றும் 3 ஒரு நாள் போட்டி தொடரை ஆடுவதற்காக ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு வந்துள்ளது. இதில், முதலாவதாக டெஸ்ட் தொடர் ஆரம்பமாக உள்ளது. இதன் முதல் டெஸ்ட் போட்டி, பிப்ரவரி 09 ஆம் தேதியன்று ஆரம்பமாகிறது. அதன் பின்னர் டெல்லி, தரம்சாலா மற்றும் அகமதாபாத்தில் அடுத்தடுத்த டெஸ்ட் போட்டிகள் நடைபெற இருக்கின்றன.
Images are subject to © copyright to their respective owners.
முன்னதாக இந்திய அணியின் அஸ்வின், ஜடேஜா மற்றும் அக்சர் படேல் உள்ளிட்ட வீரர்களின் சுழற்பந்து வீச்சு நிச்சயம் ஆஸ்திரேலிய அணிக்கு நெருக்கடி கொடுக்கும் என அந்த அணியின் பயிற்சியாளர் தெரிவித்திருந்தார். இந்த சூழ்நிலையில் அஸ்வின் போலவே பவுலிங் ஆக்ஷன் கொண்ட இந்திய இளம் வீரர் மகேஷ் பிதியாவை கொண்டு ஆஸ்திரேலிய அணி வீரர்கள் பயிற்சியில் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.
Images are subject to © copyright to their respective owners.
இந்நிலையில் அஸ்வினை சந்தித்திருக்கிறார் மஹேஷ் பிதியா. வலைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது இவர்களுடைய சந்திப்பு நடைபெற்றது. அப்போது அஸ்வினின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கியிருக்கிறார் மஹேஷ். இதனை சற்றும் எதிர்பாராத அஸ்வின் அவரை உயர்த்தி அணைத்துக்கொண்டதுடன் வாழ்த்துக்களையும் தெரிவித்திருக்கிறார். அப்போது, அங்கு வந்த விராட் கோலியும் கைகளை அசைத்து புன்னகை செய்திருக்கிறார்.
Images are subject to © copyright to their respective owners.
இதுபற்றி பேசியுள்ள மஹேஷ்," இது என் வாழ்வில் மிகவும் மகிழ்ச்சியான தினம். நான் யாரைப் பார்த்து வளர்ந்தேனோ அவரிடம் ஆசிர்வாதம் பெற்றிருக்கிறேன். அவர் என்னை கட்டியணைத்து வாழ்த்துக்களை தெரிவித்தார். இப்போது ரஞ்சி கிரிக்கெட்டில் பரோடா அணிக்காக விளையாடி வருகிறேன். ஐபிஎல் குறித்து நான் இன்னும் யோசிக்கவே இல்லை. ஆஸ்திரேலிய அணியிடமிருந்து பந்துவீச அழைப்பு வந்ததும் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள முடிவெடுத்தேன்" என்றார்.
மற்ற செய்திகள்
இறந்ததா நெனச்சு அடக்கம் செஞ்ச நபர்.. வீடியோ காலில் தோன்றியதால் இன்ப அதிர்ச்சியில் உறைந்த குடும்பம்!!
தொடர்புடைய செய்திகள்
- "மொதல்ல இத Delete பண்ணுங்கப்பா".. ரசிகர் கேட்ட கேள்வி.. தினேஷ் கார்த்திக் கொடுத்த வைரல் ரியாக்ஷன்!!
- "அந்த நேரத்துல விராட் அணி, ரோஹித் அணின்னு பிளவு இருந்துச்சா?".. பல வருசம் கழிச்சு தெரியவந்த ஷாக்!!
- அதுக்கு வாய்ப்பு இல்ல ராஜா.. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் கட்டுப்பாடு.. அஸ்வின் சொல்லும் புதுக்கணக்கு..!
- என்ன ரங்கா பழசை மறந்துட்டியா.. சீண்டிய ஆஸி.. ஆகாஷ் சோப்ராவின் பங்கமான கமெண்ட்😅..!
- "அவரை சமாளிக்கிறது ரொம்ப கஷ்டம்".. இந்திய வீரர் பத்தி ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் உஸ்மான் கவாஜா சொன்ன விஷயம்..!
- "இது தான் சரியான நேரம்"... திடீர்ன்னு ஆஸ்திரேலியா கேப்டன் எடுத்த முடிவு.. கலங்கிய ரசிகர்கள்!!
- ஷிகர் தவான் & ஷ்ரேயாஸ் அய்யரின் தீயான டான்ஸ்.. மொத்த டீமும் கமெண்ட்-ல இறங்கிடுச்சு😂.. வீடியோ..!
- "ஜஸ்ட் மிஸ்ஸு".. 2007 டி 20 WC ஃபைனல் -ல தோனி போட்ட தப்புக்கணக்கு??.. இத்தனை நாள் கழிச்சு வெளிய வந்த விஷயம்!!
- "இதோட தான் பொழுது விடிஞ்சது.. யாரு பார்த்த வேலை இது?".. கலாய்த்த அஷ்வின்.. என்ன ஆச்சு?
- "அஸ்வின் -அ Face பண்ணியே ஆகணுமே".. டூப்ளிகேட் அஸ்வினை கையில் எடுத்த ஆஸ்திரேலியா.. "யாருப்பா இந்த பையன்?