'ரசிகர்கள்ல யாருக்காவது கொரோனா தொற்று இருந்தா என்ன பண்ணுவீங்க!?'... ஐபிஎல் போட்டிகளுக்கு தடை விதிக்க கோரி வழக்கு!... என்ன செய்யப்போகிறது இந்திய கிரிக்கெட் வாரியம்?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐ.பி.எல். போட்டிகளின் போது கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க எடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் குறித்து பி.சி.சி.ஐ.யும், அணி நிர்வாகங்களும் அறிக்கை அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் கோடைக்காலத் திருவிழாவாகக் கருதப்படும் 20 ஓவர் ஐ.பி.எல். தொடர் வருகின்ற 29ம் தேதி தொடங்கவுள்ளது. ஒவ்வொரு போட்டியையும் 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ரசிகர்கள் கண்டுகளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், ஐ.பி.எல் போட்டிகளுக்கு தடை விதிக்க கோரி சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஐ.பி.எல் போட்டிகளை தள்ளிவைப்பதா? அல்லது ரசிகர்களை தெர்மல் ஸ்கேனரை கொண்டு சோதிப்பதா? என பதிலளிக்க பி.சி.சி.ஐ. தரப்பில் அவகாசம் கோரப்பட்டது.
இதையைடுத்து, கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசும், இந்திய கிரிக்கெட் வாரியமும் அறிக்கை அளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை வரும் 23ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘கொரோனாவால்’ தயக்கமா?... ‘இனி’ கவலையில்லாம ‘ஆர்டர்’ பண்ணுங்க... ‘ஸ்விக்கி’ அறிமுகம் செய்துள்ள புதிய ‘வசதி’...
- ‘இவங்க’ எல்லாம் ‘இல்லாம’ எப்படி?... மத்திய அரசின் ‘திடீர்’ அறிவிப்பால்... ‘ஐபிஎல்’ போட்டிகளுக்கு எழுந்துள்ள ‘புதிய’ சிக்கல்...
- 'செல்பி' எடுக்காதீங்க, யாரையும் தொடாதீங்க ... 'ஒரு நாள்' போட்டிக்கு முன்னதாக ... வழிமுறைகளை வகுத்த 'பிசிசிஐ' !
- ‘நடத்தலாமா வேணாமா? ரசிகர்கள் வருவாங்களா வரமாட்டாங்களா?’.. கொரோனாவால் கூடி விவாதிக்கும் ஐபிஎல் ஆட்சிமன்ற குழு!
- ‘மூச்சுத் திணறல், காய்ச்சல் இருக்கா’... ‘பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட’... ‘பழனி தண்டாயுதபாணி கோவில் நிர்வாகம்’!
- ‘வரவேண்டாம்.. வீட்ல இருந்தே வேலை செய்ங்க!’.. கொரோனா பரவாமல் இருக்க’.. ‘முதல் ஆளாக முடிவெடுத்த சென்னை நிறுவனம்!
- 'அடுத்த' தோனியை கழட்டிவிட்டு... 'சின்னப்பையனை' ஓபனிங் இறக்கிவிட... 'ஸ்கெட்ச்' போடும் கேப்டன்?
- ஐபிஎல் டிக்கெட்டுகள் 'விற்பனை' நிறுத்தம்... போட்டி நடக்குமா? நடக்காதா?... ரசிகர்கள் கவலை!
- ‘என்ன நடந்தாலும் ஊருக்கு போக மாட்டேன்..’. ‘இது என் வாழ்கையில எடுத்த தைரியமான முடிவு...’ சீனாவில் தொடர்ந்து படிக்க விரும்பும் சிங்கப் பெண்...!
- 'என்ன நடந்தாலும், எப்போது நடந்தாலும்... 'இது' மட்டும் மாறாது... ஆனால்'... கொரோனாவுக்கு சவால் விடும் தேவசம் போர்டு!... சபரிமலை பக்தர்கள் அதிர்ச்சி!