"அவரு எல்லாம் ஒரு ஆல் ரவுண்டரா?".. இந்திய வீரரை கிழித்து தொங்க விட்ட முன்னாள் வீரர்

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய அணியின் இளம் ஆல் ரவுண்டர் வீரரை, முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

Advertising
>
Advertising

இந்திய கிரிக்கெட் அணி, அடுத்ததாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக தலா 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் மற்றும் டி 20 தொடர்களில் மோதவுள்ளது.

முதலாவதாக, ஒரு நாள் தொடர் நடைபெறவுள்ள நிலையில், இதன் முதல் போட்டி, வரும் 6 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

சீனியர் வீரர்களுக்கு ஓய்வு

இந்தியாவில் வைத்து இரு தொடர்களும் நடைபெறவுள்ளதையடுத்து, தலா 18 பேர் கொண்ட இந்திய அணியும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. பும்ரா மற்றும் ஷமி ஆகிய சீனியர் வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ள நிலையில், அதிக இளம் வீரர்கள் இந்திய அணியில் இடம்பிடித்துள்ளனர். மேலும், காயத்தில் இருந்து முழுவதும் குணமடைந்துள்ள ரோஹித் ஷர்மா, இந்திய அணியின் கேப்டனாக செயல்படவுள்ளார்.

கடும் விமர்சனம்

முன்னதாக, தென்னாப்பிரிக்க தொடரில், 0 - 3 என்ற கணக்கில், இந்திய அணி ஒரு நாள் தொடரை இழந்தது. ராகுல் தலைமையிலான இந்திய அணி, மோசமாக தோல்வி அடைந்தது, கடும் விமர்சனத்தை சந்தித்திருந்தது. அதிலும் குறிப்பாக, இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்டிங் வரிசை அதிகம் விமர்சனத்தை சந்தித்திருந்தது. மேலும், ஆல் ரவுண்டராக களமிறங்கிய வெங்கடேஷ் ஐயருக்கு, முதல் ஒரு நாள் போட்டியில் பந்து வீச வாய்ப்பே வழங்கப்படவில்லை.

ஆல் ரவுண்டர் வெங்கடேஷ் ஐயர்

அடுத்த போட்டியில், அவர் பந்து வீசிய பிறகும், எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. அதே போல, மிடில் ஆர்டரில் பேட்டிங் செய்த வெங்கடேஷ் ஐயர், தலா 2 மற்றும் 22 ரன்கள் மட்டுமே எடுத்தார். தொடர்ந்து, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி 20 தொடரில் மட்டுமே அவருக்கு வாய்ப்பும் கொடுக்கப்பட்டுள்ளது.

பெரிய அளவில் இல்லை

இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரரான மதன் லால், வெங்கடேஷ் ஐயர் குறித்து சில கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். 'ஐந்து அல்லது ஆறாவது இடத்தில், வெங்கடேஷ் ஐயர் களமிறங்கினால், நிச்சயம் அவர் சிறப்பாக ஆடமாட்டார் என நான் நினைக்கிறேன். அவரது பந்து வீச்சும், பெரிய அளவில் ஒன்றுமில்லை என்றே தெரிகிறது. அதிகபட்சம் 2 முதல் 3 ஓவர்கள் மட்டும் தான் அவரால் பந்து வீச முடியும். தன்னுடைய பந்து வீச்சை மேம்படுத்தும் பணிகளிலும் அவர் ஈடுபடவில்லை.

வெங்கடேஷ் ஐயர் ஒரு ஆல் ரவுண்டராக தான் அணியில் இடம் பிடிக்க வேண்டும் என நீங்கள் நினைத்தால், நிச்சயம் அது மிகவும் கடினமான காரியம் தான். அவரை ஓப்பனிங் பேட்ஸ்மேனாக மட்டும் தான் நீங்கள் முயற்சி செய்து பார்க்க முடியும்' என மதன் லால் தெரிவித்துள்ளார்.

ஆல் ரவுண்டர்கள் காயம்

இந்திய அணியின் ஆல் ரவுண்டர்களான ரவீந்திர ஜடேஜா மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் காயம் காரணமாக, தொடர்ந்து அணியில் இடம் பிடிக்காமல் இருந்து வருகின்றனர். இதன் காரணமாக, அந்த இடத்தில் வேறு வீரர்களை தேர்வு செய்யும் போது, மிடில் ஆர்டர் பேட்டிங் மற்றும் எக்ஸ்டரா பவுலிங் ஆப்ஷன் ஆகியவை, இந்திய அணிக்கு பெரிய பிரச்சனையாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

VENKATESH IYER, MADHAN LAL, IND VS WI, மதன் லால், வெங்கடேஷ் ஐயர்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்