"கிரிக்கெட்டுக்கு கெடச்ச பெரிய 'சொத்து'ங்க அவரு... அவரோட பெயரை கேட்டாலே புல்லரிக்குது..." 'இந்திய' வீரரால் நெகிழ்ந்து போன 'லுங்கி நிகிடி'!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

14 ஆவது ஐபிஎல் தொடர், வரும் ஏப்ரல் மாதம் 9 ஆம் தேதியன்று சென்னையில் வைத்து ஆரம்பமாகவுள்ளது.

"கிரிக்கெட்டுக்கு கெடச்ச பெரிய 'சொத்து'ங்க அவரு... அவரோட பெயரை கேட்டாலே புல்லரிக்குது..." 'இந்திய' வீரரால் நெகிழ்ந்து போன 'லுங்கி நிகிடி'!!

முதல் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதவுள்ள நிலையில், ஐபிஎல் நெருங்கி வருவதால், சில அணி வீரர்கள் தற்போதே பயிற்சியை ஆரம்பித்துள்ளனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கேப்டன் தோனி, வீரர்கள் அம்பத்தி ராயுடு, ஹரி நிஷாந்த், சாய் கிஷோர், ஜெகதீசன் உள்ளிட்ட வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
lungi ngidi reveals how dhoni aura give him goosebumps

தென்னாபிரிக்க வீரரான லுங்கி நிகிடியும் (Lungi Ngidi) சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடி வரும் நிலையில், இந்தாண்டுக்காக சென்னை அணியில் ஆடுவது பற்றி கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். 'முதல் முறையாக, நான் சென்னைக்கு ஆட வந்த போது, மைதானத்தை சுற்றிலும் உள்ள ரசிகர்கள், தோனியின் பெயரை உச்சரிக்கும் போது, ஒருவித சிலிர்ப்பு ஏற்படும்.


அவர் கிரிக்கெட்டிற்கும், சென்னை அணிக்கும் கிடைத்த மிக முக்கியமான வீரர். அனைவரும் கூறுவதைப் போல, அவர் கேப்டன் கூல் தான்' என தனது கேப்டனை பாராட்டியுள்ளார்.
lungi ngidi reveals how dhoni aura give him goosebumps

மேலும் பேசிய நிகிடி, 'தோனியின் நிலையான ஆட்டம் குறித்து தான் நான் எப்போதும் அதிசயித்து பார்க்கிறேன். இயல்பாகவே அதிகம் பேசாத தோனி, தனது அணி வீரர்களுக்கு ஒரு உதவி தேவைப்படும் போது, அதனை உணர்ந்து சிறப்பாக செயல்படுவார். அவரது தலைமையில் ஆடுவதை மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன்' என தெரிவித்துள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்களது முதல் போட்டியில், டெல்லி கேப்பிடல்ஸ் அணியை ஏப்ரல் 10 ஆம் தேதியன்று சந்திக்கவுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்