புது டீம், முதல் மேட்ச்.. ஆசையா வந்த வார்னருக்கு ஆப்பு வச்ச இளம் வீரர்.. யாருப்பா அந்த பையன்..? வெளியான வேறலெவல் ரெக்கார்ட்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் தொடரில் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் இளம் வீரரின் ஓவரில் தொடர்ந்து மூன்று முறை அவுட்டாகி வெளியேறியுள்ளார்.

Advertising
>
Advertising

ஐபிஎல் தொடரின் 15-வது லீக் போட்டி இன்று (07.04.2022) மும்பை மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியும் மோதுகின்றன. டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி, 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக ப்ரீத்வி ஷா 61 ரன்களும், ரிஷப் பந்த் 39 ரன்களும், சர்பராஸ் கான் 36 ரன்களும் எடுத்தனர். லக்னோ அணியை பொறுத்தவரை ரவி பிஷ்னோய் 2 விக்கெட்டுகளும், கிருஷ்ணப்பா கௌதம் 1 விக்கெட்டும் எடுத்தனர்.

இந்த நிலையில் இப்போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டேவிட் வார்னர் 4 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றமளித்தார். பல ஆண்டுகளாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் விளையாடி வந்த ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னரை, கடந்த ஐபிஎல் தொடருடன் அந்த அணி விடுவித்தது. இதனை அடுத்து நடந்த ஐபிஎல் ஏலத்தில் டெல்லி அணி அவரை வாங்கியது.

இதனிடையே பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆஸ்திரேலிய அணி கிரிக்கெட் அணி, ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாடியது. அதனால் முதல் சில ஐபிஎல் போட்டிகளில் ஆஸ்திரேலிய வீரர்கள் பலரும் கலந்து கொள்ளவில்லை. தற்போது பாகிஸ்தான் தொடர் முடிவடைந்ததால் டேவிட் வார்னர் உட்பட பல ஆஸ்திரேலிய வீரர்கள் ஐபிஎல் அணிகளுடன் இணைந்துள்ளனர்.

அந்த வகையில் இன்றைய லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணியின் சார்பாக டேவிட் வார்னர் களமிறங்கினார். அதிரடியாக விளையாடி ரன்களை குவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 12 பந்துகளை எதிர்கொண்ட அவர் 4 ரன்னில் அவுட்டாகி வெளியேறினார். அதில் லக்னோ அணியின் இளம் சுழற்பந்து வீச்சாளர் ரவி பிஷ்னோய் வீசிய ஓவரில் டேவிட் வார்னர் ஆட்டமிழந்தார். ஐபிஎல் தொடரில் இதுவரை ரவி பிஷ்னோய் வீசிய ஓவரில் 6 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டுள்ள டேவிட் வார்னர், 3 முறை அவுட்டாகியுள்ளார். மேலும் அவரின் ஓவரில் மொத்தமாக 5 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

DAVIDWARNER, IPL, RAVIBISHNOI, LSGVDC

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்