“வாய்ப்புக்காக ரொம்ப காலமா காத்திருந்தாரு.. இப்போ வேறலெவல்ல விளையாடுராப்ல”.. இளம் வீரரை ஸ்பெஷலாக பாராட்டிய ராகுல்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுலக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல், இளம் வீரர் ஒருவரை புகழ்ந்து பேசியுள்ளார்.
ஐபிஎல் தொடரில் 11-வது லீக் போட்டி நேற்று மும்பை மைதானத்தில் நடைபெற்றது. இதில் கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 169 ரன்களை எடுத்தது.
அதிகபட்சமாக லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் 68 ரன்களும், தீபக் கூடா 51 ரன்களும் எடுத்தனர். ஹைதராபாத் அணியை பொறுத்தவரை நடராஜன், வாஷிங்டன் சுந்தர் மற்றும் ரொமாரியோ ஷெப்பர்ட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர். இதனை அடுத்து பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி, 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதனால் 12 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி பெற்றது.
இந்த நிலையில் போட்டி முடிந்த பின் பேசிய லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல், அந்த அணியின் இளம் வீரர் தீபக் ஹூடா குறித்து புகழ்ந்து பேசியுள்ளார். அதில், ‘இந்த போட்டி மிகவும் சிறப்பாக அமைந்தது. நாங்கள் எப்போதும் போட்டியில் இருக்க வேண்டும், வெற்றி பெற வேண்டும் என்பதை யோசித்துக் கொண்டே இருப்போம். அந்த வகையில் இப்போட்டியில் பந்துவீச்சாளர்கள் மிகவும் அருமையாக பந்து வீசினார். பேட்டிங்கில் ஆரம்பத்தில் விக்கெட்டுகள் விழுந்தாலும், அதிலிருந்து மீண்டு நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தோம்.
நான் தீபக் கூடா உடன் நிறைய போட்டிகளில் விளையாடி இருக்கிறேன். கடந்த 3-4 சீசன்களாக அவருடன் நிறைய பேசியிருக்கிறேன். அவருக்கு பேட்டிங் செய்வது மிகவும் பிடிக்கும். வலைப் பயிற்சியின் போது அதிக நேரம் செலவிட்டு பயிற்சி மேற்கொள்வார். எப்போதும் புதிய விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டும் என்பதில் ஆர்வமாக இருப்பார். நீண்ட காலமாக வாய்ப்புக்காக காத்திருந்த அவர், தற்போது கிடைக்கும் வாய்ப்புகளை சிறப்பாக பயன்படுத்திக் கொள்கிறார். இந்த இடத்திலிருந்து இன்னும் உயரத்திற்கு செல்வார். மிடில் ஆர்டரில் அவரது பேட்டிங் அற்புதமாக இருந்தது’ என கே.எல்.ராகுல் பாராட்டிப் பேசியுள்ளார்.
நேற்றைய போட்டியில் டி காக், எவின் லூயிஸ், மணிஷ் பாண்டே என அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்து லக்னோ அணி இக்கட்டான நிலையில் இருந்தது. அப்போது களமிறங்கிய தீபக் ஹூடா, கே.எல்.ராகுலுடன் கூட்டணி அமைத்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் லக்னோ அணி சரிவில் இருந்து மீண்டது. அப்போட்டியில் தீபக் ஹூடா, 33 பந்துகளில் 51 ரன்கள் (3 சிக்சர், 3 பவுண்டரி) அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- “இன்னும் அந்த ரிப்போர்ட் வரல”.. தீபக் சஹார் எப்போ வருவார்..? சிஎஸ்கே சிஇஓ புது அப்டேட்..!
- IPL2022: ”இன்னைக்கு சில தெரிஞ்ச முகங்களோட மோத வேண்டி இருக்கு”…. RCB அணி பகிர்ந்த நாஸ்டால்ஜியா photos !
- ‘பாவம் மனசு ஒடஞ்சி போய்ட்டாங்க’.. மறுபடியும் சொதப்பிய SRH.. வைரலாகும் காவ்யா மாறன் போட்டோ..!
- அந்த தமிழ்நாடு பிளேயர World cup மேட்ச்'ல ரொம்ப மிஸ் பண்ணோம்.. அவர் இருந்திருந்தா கதையே வேற.. இப்போ ஃபீல் பண்ணும் ரவி சாஸ்திரி
- என்னதாங்க ஆச்சு இவருக்கு?.. மறுபடியும் சொதப்பிய லக்னோ வீரர்.. விட்டும் விளாசும் நெட்டிசன்கள்..!
- “சிஎஸ்கே இன்னும் ஒரு மேட்ச்ல தோத்தா அவ்ளோதான்”.. தொடர் தோல்வியால் வந்த சிக்கல்.. எச்சரிக்கை செய்த முன்னாள் வீரர்..!
- “அந்த முடிவு ஜடேஜாவோடது கிடையாது.. தோனி எடுத்தது”.. பரபரப்பு கருத்தை சொன்ன முன்னாள் வீரர்..!
- CSK vs PBKS: “எங்க டீமோட கீ ப்ளேயரா இருக்க போறாரு”.. ரசிகர்கள் விமர்சித்த வீரருக்கு சப்போர்ட் பண்ணிய கேப்டன் ஜடேஜா..!
- IPL 2022: "கடைசியா 2013-ல MI கிட்ட இப்படி தோத்தது".. 9 வருசம் கழிச்சு மோசமான தோல்வியை சந்தித்த CSK..!
- "எவ்ளோ நேர்மையா இருக்காரு!!.." நடுவரிடம் 'Dhoni' காட்டிய சைகை.. விஷயம் தெரிஞ்சதும் கொண்டாடிய ரசிகர்கள்