கே.எல்.ராகுலுக்கு அபராதம்.. ‘மறுபடியும் இதே மாதிரி நடந்தா ஒரு மேட்ச்ல விளையாட முடியாது’.. IPL நிர்வாகம் அதிரடி..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் கேப்டன் கே.எல்.ராகுலுக்கு ஐபிஎல் நிர்வாகம் அபராதம் விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertising
>
Advertising

Also Read | “அதுக்கான நேரம் வந்திருச்சு”.. IPL-ல் பட்டைய கிளப்பும் நடராஜன்.. முன்னாள் இந்திய கேப்டன் ஓபன் டாக்..!

ஐபிஎல் தொடரின் 37-வது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக கேப்டன் கே.எல்.ராகுல் 103 ரன்கள் எடுத்தார்.

இதனை அடுத்து பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதனால் 36 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி அபார வெற்றி பெற்றது. இதில் கே.எல்.ராகுலுக்கு ஆட்டநாயகன் விருது கொடுக்கப்பட்டது.

இந்த நிலையில் இப்போட்டியில் மெதுவாக ஓவர் வீசியதற்காக லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுலுக்கு ஐபிஎல் நிர்வாகம் அபராதம் விதித்துள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் இது இரண்டாவது முறை என்பதால் அவருக்கு 25 லட்சம் ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அணி வீரர்கள் அனைவருக்கும் 6 லட்சம் ரூபாய் அல்லது போட்டிக்கான ஊதியத்திலிருந்து 25 சதவீதம் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தவறு மீண்டும் ஒருமுறை நடைபெற்றால் லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுலுக்கு போட்டிக்கான ஊதியத்தில் 100 சதவீதம் அபராதமாக விதிக்கப்படும். மேலும் ஒரு போட்டியில் விளையாடத் தடை விதிக்கப்படும். அதேபோல் அந்த அணி வீரர்களின் ஊதியத்தில் 50 சதவீதம் அல்லது 12 லட்சம் ரூபாயை அபராதமாக செலுத்த வேண்டி வரும் என தகவல் வெளியாகியுள்ளது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

CRICKET, IPL, IPL 2022, KL RAHUL, LSG CAPTAIN KL RAHUL, LSG VS MI, MUMBAI INDIANS, LUCKNOW SUPER GIANTS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்