KL ராகுலுக்கு அபராதம்.. ஸ்டோனிஸிக்கு எச்சரிக்கை.. IPL நிர்வாகம் அதிரடி ஆக்ஷன்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுலக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் கேப்டன் கே.எல்.ராகுலுக்கு ஐபிஎல் நிர்வாகம் அபராதம் விதித்துள்ளது.
ஐபிஎல் தொடரின் 31-வது லீக் போட்டி நேற்று மும்பை மைதானத்தில் நடைபெற்றது. இதில் கே.எல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், டு பிளசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதின. முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி, 20 ஓவர்களில் 181 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக டு பிளேசிஸ் 96 ரன்களும், சபாஷ் அகமது 26 ரன்களும் எடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய லக்னோ அணி, 20 ஓவர்களில் 163 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதனால் 18 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது.
இந்த நிலையில் இந்த போட்டியில் விளையாடிய லக்னோ அணியின் கேப்டன் ராகுலுக்கு அபராதமும், அந்த அணியின் ஆல்ரவுண்டர் மார்கஸ் ஸ்டானிஸிக்கு எச்சரிக்கையும் ஐபிஎல் நிர்வாகம் கொடுக்கப்பட்டுள்ளது. நேற்றைய போட்டியில் இருவரும் ஆட்டமிழந்த பின் எதிரணியை வார்த்தைகளால் வசை பாடினார். இது அப்படியே ஸ்டம்ப் மைக்கில் பதிவானது.
அதனால் கேப்டன் கே.எல்.ராகுல் போட்டி ஊதியத்தில் இருந்து 20 சதவீதம் அபராதமும், மார்கஸ் ஸ்டோனிஸிக்கு எச்சரிக்கையும் கொடுக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் விதிமுறைப்படி, இப்படி எதிரணி வீரர்களை வசைபாடும் போது முதல் முறை எச்சரிக்கை விடப்படும். ஆனால் அணியின் கேப்டன் இந்த காரியத்தை செய்து இருந்தால் அவருக்கு அபராதம் விதிக்கப்படும். அந்த வகையில்தான் தற்போது கே.எல்.ராகுலுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
Also Read | “கடவுள் மாதிரி வந்து ரெய்னா ஹெல்ப் பண்ணார்”.. உருக்கமாக பேசிய SRH இளம் வீரர்..!
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "மகன் IPL ஆடி நாடு முழுக்க ஃபேமஸ்.. அதுக்காக என் வேலைய விட முடியாது.." ஜூஸ் கடை நடத்தும் தந்தை.. பாராட்டும் ரசிகர்கள்
- "எதுக்கு இவ்ளோ கோபம்?.." நடுவரை திட்டிய ஸ்டியோனிஸ்??.. ஒரே மேட்டர்'ல இப்படி ஆயிடுச்சே 'பாஸ்'
- “2 மாசமோ இல்ல, ஒன்றரை மாசமோ சீக்கிரம் இதை பண்ணுங்க”.. கோலிக்காக களமிறங்கிய ரவி சாஸ்திரி..!
- ”அவர CSK ஜெர்ஸியில பாக்கணும்…. இதே அதிரடி தொடரணும்”- RCB வீரருக்காக உருகிய விக்னேஷ் சிவன்!
- IPL மேட்சை இலவசமாக பார்க்க App.. சிக்கிய சிவகங்கை இளைஞர்.. அதிர வைத்த சம்பவம்..!
- "மீண்டும் மீண்டுமா??.." பண்றத எல்லாம் பண்ணிட்டு சிரிச்சுக்கிட்டே நின்ன கோலி.. உச்சகட்ட கடுப்பில் ரசிகர்கள்
- "அவரு பேட்டிங் பாக்குறப்போ.. எனக்கே திரும்பி ஆடணும்ன்னு ஆசை வருது.." தமிழக வீரரை மிரண்டு போய் பாராட்டிய 'ஏபிடி'
- "அவரு 'Sledging' பண்றதுல கில்லி.. அப்படியே என்கிட்ட வந்து.." கோலியுடன் நடந்த Face Off.. சூர்யகுமார் ஓபன் டாக்
- “டீம் கிட்ட ப்ளேயர்ஸ் லிஸ்ட் அனுப்பிட்டோம்”.. தீபக் சஹாருக்கு மாற்றுவீரர் யார்?.. CSK சிஇஓ முக்கிய அப்டேட்..!
- “அஸ்வின், சஹால் ஓவரை அவர் நல்லா அடிப்பார்”.. ஸ்கெட்ச் போட்டு விளையாடியும் மிஸ்ஸான வெற்றி.. KKR கோச் ஆதங்கம்..!