‘வாய்ப்புக்காக நிறைய இளம் வீரர்கள் காத்திருக்காங்க’... ‘காலத்தின் கட்டாயம் இது’... ‘அதனால ஐபிஎல் தரம் குறையாது’... ‘ராகுல் ட்ராவிட்டின் அதிரடி பதில்’...!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் போட்டிக்கான அணிகளின் எண்ணிக்கை அதிகரிக்க உள்ள நிலையில், அதிகமான இளம் வீரர்கள் வெளிச்சத்திற்கு வருவார்கள் என்று ராகுல் ட்ராவிட் தெரிவித்துள்ளார்.

ஐ.பி.எல். போட்டிக்கான அணிகளின் எண்ணிக்கை வருகிற 2021-ம் ஆண்டில் 8-ல் இருந்து 9 ஆக அதிகரிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.  இந்த எண்ணிக்கை வரும் 2023-ம் ஆண்டில் 10 ஆகவும் அதிகரிக்க கூடும் என கூறப்படுகிறது.

இந்நிலையில், பிசிசிஐ-யின் திட்டம் பற்றி இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் தேசிய கிரிக்கெட் அகாடமியின் இயக்குனரான ராகுல் டிராவிட் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறும்போது, ‘கிரிக்கெட் உலகில் தங்களின் திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புக்காகப் பல இளம் வீரர்கள் காத்திருக்கிறார்கள். அதனால், ஐபிஎல் தொடரில் புது அணியை உருவாக்குவது காலத்தின் கட்டாயம்.  கூடுதலான அணிகள் உருவாவதற்கான சாத்தியங்கள் உள்ளன. 

இதன்மூலம், இந்திய அணிக்குத் தரமான வீரர்கள் கிடைப்பார்கள். நிறைய அணிகள் இருக்கும்பொழுது, அனைத்து திறமையான வீரர்களும் அணியில் இடம் பெறுவார்கள். இதனால் ஐபிஎல் போட்டிகளின் தரத்திலும் நிச்சயம் குறைவு இருக்காது. 2011 முதல் 2020 வரை இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதற்கு ஐபிஎல்லும் முக்கிய காரணம்’ என கூறியுள்ளார்.

மேலும், ‘மும்பை இந்தியன்ஸ் அணியில் உலகத்தரம் வாய்ந்த டி20 வீரர்கள் உள்ளனர். இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ் போன்ற திறமையான உள்ளூர் வீரர்களும் அணியில் இருக்கிறார்கள். மொத்தத்தில் ஒரு வலிமையான அணியாகத் திகழ்கிறது. அவர்கள் யாரையும் குறைத்து மதிப்பிட மாட்டர்கள். இதனால்தான் அவர்களால் சிறப்பாக சோபிக்க முடிகிறது’ என ராகுல் ட்ராவிட் கூறினார். இவரது பயிற்சியால் , இந்திய ‘ஏ’ அணி மற்றும் 19 வயதுக்குட்பட்ட பல இளம் வீரர்களின் திறமை ஜொலித்து வருவது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்