அசுர வேகத்தில் தலையை தாக்கிய பந்து... நிலைகுலைந்து போன ப்ரித்வி ஷா!.. அவசர அவசரமாக மருத்துவ பரிசோதனை!.. கலக்கத்தில் சக வீரர்கள்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇலங்கைக்கு எதிரான இந்தியாவின் முதல் ஒருநாள் போட்டியில், பவுன்ஸ் பந்து ஒன்று ப்ரித்வி ஷா ஹெல்மெட்டில் மிக பலமாக தாக்கியது.
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய அணி, அங்கு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இதன் முதல் ஒருநாள் போட்டி நேற்று (ஜுலை 18) கொழும்பு பிரேமதாஸா மைதானத்தில் நடைபெற்றது.
இதில், டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி 50 ஓவர்கள் முடிவில், 9 விக்கெட் இழப்புக்கு 262 ரன்கள் எடுத்தது. 120 ரன்களுக்குள் அந்த அணி 4 முக்கிய விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய பிறகும் மீண்டு வந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 262 ரன்களை எட்டியது. எனினும், அந்த அணி 200 ரன்களையே கடக்கும் என்று யாரும் எதிர்பார்க்காத நிலையில், பிரேமதாஸா பிட்ச்சின் ஸ்பின் டிராக்குக்கு ஏற்ப நல்ல ஸ்கோரை எட்டியது இலங்கை.
இதையடுத்து, இந்திய அணியில் ஷிகர் தவான் - ப்ரித்வி ஷா தொடக்க வீரர்களாக களமிறங்கினர். தவான் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்த ப்ரித்வி ஷா அதிரடி காட்டி, 24 பந்துகளில் 43 ரன்களை விளாசினார். இதில், 9 பவுண்டரிகள் அடக்கம். அப்போது சமீரா வீசிய பந்து ஒன்று, ப்ரித்வி ஹெல்மெட்டில் மிக பலமாக தாக்கியது. ஹெல்மெட்டில் பட்ட வேகத்தில் அது பவுண்டரிக்கே சென்றுவிட்டது.
இதனால் ப்ரித்வி ஷா சிறிது நேரம் நிலைகுலைந்து போனார். உடனடியாக நிபுணர்கள் வந்து அவரை சோதனை செய்தார்கள். இதனால் கிட்டத்தட்ட 5 நிமிடங்கள் ஆட்டம் தடைப்பட்டது. தனக்கு அடிபட்ட இடத்தை ப்ரித்வி காண்பிக்க, நிபுணர்கள் பரிசோதனை செய்தனர். அதன் பிறகு அவர் பேட்டிங் செய்ய ஒப்புக் கொண்டாலும், அவரிடம் ஒரு தடுமாற்றம் தெரிந்தது. அதற்கு ஏற்ற வகையில், அவர் சந்தித்த அடுத்த பந்திலேயே கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
எனினும், அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து இதுவரை ஏதும் தகவல் வெளியிடப்படவில்லை. நாளை 2வது ஒருநாள் போட்டி தொடங்கவுள்ள நிலையில், அவர் அதில் விளையாடுவாரா என்பது குறித்து இனிமேல் தான் அறிவிக்கப்படும். அடி சற்று பலமாக இருந்ததால், அவருக்கு தலையில் நிச்சயம் ஸ்கேன் செய்து பார்க்கப்படும் என்றே தெரிகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'ப்ளீஸ்... இப்படி பண்ணாதீங்க!'.. 'அவங்க கண்டிப்பா வேணும்!'.. மிகப்பெரிய தவறிலிருந்து காப்பாற்ற... இந்திய அணியிடம் கெஞ்சும் முன்னாள் வீரர்!
- ‘ஒரு மூத்த வீரர் இப்படியா பேசுறது..!’.. பெண் கிரிக்கெட் வீராங்கனைகள் குறித்து ‘ஆபாச’ கமெண்ட்.. சிறப்பான, தரமான ‘பதிலடி’ கொடுத்த வீராங்கனை..!
- 'நீண்ட இடைவெளிக்கு பிறகு... நேருக்கு நேர் மோதிக் கொள்ளும் பங்காளிகள்'!.. டி20 உலகக் கோப்பையில்... ஐசிசி போட்ட மாஸ்டர் ப்ளான்!
- 'ரிஷப் பண்ட்-க்கு எப்படி கொரோனா வந்துச்சு'?.. 'பிசிசிஐ சறுக்கியது எங்கே'?.. ஒரே வரியில் அனைவரையும் ஆஃப் செய்த கங்குலி!
- இவரோட கோபத்துக்காக ஒரு ‘வைரத்தை’ தொலைச்சிட்டீங்களே.. ‘வெளியேறிய இளம் வீரர்’.. க்ருணால் பாண்ட்யாவை ‘லெஃப்ட் ரைட்’ வாங்கும் ரசிகர்கள்..!
- ரிஷப் பண்ட்-ஐ கழட்டிவிட்ட இந்திய அணி!.. இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்காக... பிசிசிஐ ஒளித்து வைத்திருந்த 'பலே திட்டம்'!.. அதிகாரப் பூர்வ அறிவிப்பு!
- VIDEO: ‘நியாயமா பார்த்தா அவர்தான் உங்கள திட்டணும்’.. கிரவுண்டில் ‘காமெடி’ பண்ணிய முன்னாள் கேப்டன்.. வறுத்தெடுக்கும் ரசிகர்கள்..!
- பெரிய பட்ஜெட்டில் உருவாகும் ‘தாதா’ வாழ்க்கை வரலாறு.. ஹீரோ இவர்தானா..? எதிர்பார்ப்பை எகிற வைத்த தகவல்..!
- 'இந்திய அணியின் முன்னாள் வீரர் மரணம்...' '1983 வேர்ல்டு கப்ல முக்கியமான பில்லர்...' - கிரிக்கெட் வீரர்கள் இரங்கல்...!
- 'அவருக்கு பயங்கரமான அழுத்தம் இருக்கு'!.. இந்திய அணிக்கு புதிய கோச்?.. ரவி சாஸ்திரியை அலெர்ட் செய்த முன்னாள் வீரர்!