‘அவருக்கு ஏன் இந்திய அணியில் இடம் கொடுக்கல’... ‘கண்டிப்பா அவர சேர்த்து இருக்கணும்’... ‘மும்பை இந்தியன்ஸ் வீரருக்கு’... ‘கிரிக்கெட் ஜாம்பவான் ஆதரவு’
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் போட்டியில் அதிரடி ஆட்டம் ஆடிய சூர்யகுமார் யாதவை ஆஸ்திரேலியாவுக்கான இந்திய அணியில் சேர்த்திருக்க வேண்டும் என்று கிரிக்கெட் ஜாம்பவான் பிரையன் லாரா கூறியுள்ளார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் வரும் 27-ம் தேதி முதல் 3 ஒருநாள், 3 டி20 மற்றும் 4 டெஸ்ட் போட்டிகளை கொண்ட 3 தொடர்களில் பங்கேற்று விளையாடவுள்ளன. இந்த தொடருக்கான இந்திய அணி வீரர்கள், ஐபிஎல் தொடரின் இடையில் அறிவிக்கப்பட்ட நிலையில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மும்பை இந்தியன்ஸ் வீரர் சூர்யகுமார் யாதவ் அதில் இடம்பெறவில்லை.
இதனால் பல முன்னாள் வீரர்கள் பிசிசிஐ-யை விமர்சித்திருந்தனர். இதுகுறித்து மனம் திறந்த சூர்யகுமார், ஆஸ்திரேலிய தொடரில் இடம்பெறாததால், தான் ஏமாற்றம் அடைந்ததாகவும் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மாவின் ஆலோசனையின் காரணமாகவே, அதிலிருந்து வெளிவந்ததாகவும் சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரில் சூர்யகுமார் யாதவ் கண்டிப்பாக இடம்பெற்றிருக்க வேண்டும் என்று முன்னாள் மேற்கிந்திய தீவுகள் அணியின் கேப்டன் பிரையன் லாரா தெரிவித்துள்ளார். அதற்கான அனைத்து தகுதிகளும் அவருக்கு உள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
இதுபற்றி பிரையன் லாரா கூறியதாவது, சூர்யகுமார் யாதவ் அருமையான வீரர். ஒரு வீரர் ரன்களை குவிப்பதை மட்டுமே தான் கருத்தில் கொள்வதில்லை. மாறாக, அவர்களுடைய ஆட்டத்தின் தொழில்நுட்பம், நெருக்கடியான சூழல்களை சமாளிக்கும் திறமை, எந்த நிலைகளில் பேட்டிங் செய்கின்றனர் என்பது அனைத்தையும் வைத்து பார்க்கும்போது, சூர்யகுமார் யாதவ், மும்பை இந்தியன்ஸ் அணிக்காக இவை அனைத்தையும் சிறப்பாக பங்களிப்பு செய்துள்ளார்.
தொடக்க வீரர்களைத் தவிர 3-ம் நிலையில் விளையாடும் வீரரே அணியின் சிறந்த பேட்ஸ்மேன். அவரைத் தான் ஒரு அணி நம்பும். மும்பை அணிக்கு அப்படித்தான் உள்ளார் சூர்யகுமார் யாதவ். இதனால் இந்திய அணியில் ஏன் அவர் இடம்பெற்றிருக்கக் கூடாது’ எனக் கேட்கிறேன் என்றார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘இப்டி யாராவது செய்வாங்களா?’... ‘தமிழக வீரர் செய்தது’... ‘எனக்கு ஏமாற்றமா இருந்துச்சு’... ‘முன்னாள் வீரர் விமர்சனம்’...!!!
- ‘இந்திய அணியில் தேர்வு செய்யாததால்’... ‘மனம் உடைந்துப் போன இளம் வீரர்’... ‘ஆறுதல் சொல்லக்கூட நான் போகல’... ‘ஆனா, அவரே வந்து’... ‘ரகசியம் உடைத்த ரோகித் சர்மா’...!!!
- ‘தந்தையின் இறுதிச் சடங்கில்’... ‘கலந்துகொள்ள வாய்ப்பு இருந்தும்’... ‘இந்திய இளம் வீரர் எடுத்த முடிவு’... ‘பிசிசிஐ அளித்த விளக்கம்’...
- 'ஃபர்ஸ்ட்டு நான் எதுக்கு அத பண்ணனும்?!!'... 'சீண்டிய முன்னாள் வீரருக்கு'... 'ஹிட்மேன் கொடுத்த பதிலடி!!!'... 'ஆமா இவரு யார சொல்றாரு???'...
- "நான் எடுத்த முடிவுதான் கரெக்ட்டு!"... 'இந்த சீசனில் விளையாடாதது குறித்து'... 'சிஎஸ்கே வீரர் சொல்லும் காரணம்!!!'...
- 'நடராஜன் தான் என் ஹீரோ!!!'... 'தமிழக வீரருக்கு'... 'ஜாம்பவான் வாயிலிருந்து இப்படி ஒரு பாராட்டா?!!'... 'அப்போ இனிமே சரவெடிதான்?!!'...
- "நானே அத கொஞ்சமும் எதிர்பாக்கல!!!"... 'விடாமல் தொடரும் சர்ச்சைகளுக்கு நடுவே'... 'நடந்ததை போட்டுடைத்த சூர்யகுமார் யாதவ்?!!'...
- 'ஆஹா... நம்ம அருமை பெருமைக்கு எல்லாம் ஆப்பு வைக்க பாக்குறாங்களே!'.. 'சூனா பானா' போல விழித்துக் கொள்வாரா பண்ட்?.. செம்ம கடுப்பில் கோலி!
- ‘கொரோனா பாதிப்பு நேரத்திலும்’... ‘24 மணிநேரத்தில் எல்லாமே தீர்ந்து போச்சு’... ‘மகிழ்ச்சியில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம்’...!!!
- 'வரம்பு மீறி கலாய்த்த சேவாக்'... 'கேட்ட மத்தவங்களே கடுப்பான போதும்'... 'பக்குவமாக பதில் சொன்ன ஸ்டார் பிளேயர்!!!'...