'அது வெறும் வதந்திதான் சாமி!'.. “லாக்டவுன்ல வீட்லயே இருக்காங்கல்ல.. புரியது!”.. சாக்‌ஷி தோனி அனல் பறக்கும் ட்வீட்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ‘தல’யுமான தோனி முழு ஓய்வு பெறுவதாக இணையத்தில் #DhoniRetires என்கிற ஹேஷ்டேக் வலம் வந்தது.

Advertising
Advertising

இதனைக் கண்டிக்கும் வகையில் தோனியின் மனைவி சாக்‌ஷி தோனி,  “இது வதந்தி, ஊரடங்கால் வீட்டில் அடைந்துள்ள பலரும் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளதையே இதில் இருந்து புரிந்துகொள்ள முடிகிறது” என்று தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இதனை அடுத்து, சாக்‌ஷியின் இந்த அனல் பறக்கும் ட்வீட்டை ஷேர் செய்யத் தொடங்கியுள்ள தோனி ரசிகர்கள் அவரது பதிலை வரவேற்றதோடு, #DhoniNeverTires என்கிற ஹேஷ்டேகின் கீழ் தங்கள் ஆதரவு கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

இதனிடையே தோனியின் ஓய்வுகுறித்த வந்திகளுக்கு நறுக்கென்று பதில் ட்வீட் போட்டு தெளிவுபடுத்திய பின்னர்,  சாக்‌ஷி தோனி தனது ட்வீட்டை டெலிட் செய்துவிட்டதும் குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்