"அந்த சம்பவம் எங்களை ரொம்ப பாதிச்சிடுச்சு".. மனம் திறந்த அர்ஜென்டினா கோச்.. வெற்றிக்கு பின்னால் இருந்த மறக்க முடியாத வலி..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

அர்ஜென்டினா கால்பந்து அணியின் பயிற்சியாளர் லியோனல் ஸ்கலோனி தங்களது அணிக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக இருந்த சம்பவம் பற்றி பேசியிருக்கிறார்.

Advertising
>
Advertising

Also Read | நீண்ட நேரம் அசைவின்றி டேபிளின் மீது தலைவைத்து படுத்திருந்த பெண்??.. கதவை உடைத்து உள்ளே போன போலீஸ்க்கு காத்திருந்த ட்விஸ்ட்..

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட விளையாட்டு கால்பந்து. சாதாரண போட்டிகளுக்கே மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு இருக்கும். அப்படியிருக்க உலகக்கோப்பை என்றால் சொல்லவா வேண்டும்? உலக மக்களின் பெரும் எதிர்பார்களுக்கு இடையே இந்த ஆண்டுக்கான கால்பந்து உலகக்கோப்பை கால்பந்து தொடர் மத்திய கிழக்கு நாடான கத்தாரில்  நடைபெற்று வருகிறது. கடந்த 2018 ஆம் ஆண்டு ரஷ்யாவில் கால்பந்து உலகக்கோப்பை நடைபெற்ற நிலையில், தற்போது கத்தாரில் இந்த தொடர் நடைபெற்று வருகிறது.

இந்த தொடரின் லீக் போட்டியில் பலம் வாய்ந்த அர்ஜென்டினாவை எதிர்த்து சவூதி அரேபியா விளையாடியது. பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் முதல் பாதியில் போட்டி துவங்கிய 10 நிமிடங்களுக்குள் கோல் அடித்து அசத்தினார் அர்ஜென்டினாவின் மெஸ்ஸி. இதன்மூலம், 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது அர்ஜென்டினா. ஆனால், ஆட்டம் இரண்டாம் பாதியில் தலைகீழாக மாறியது. சவூதி அரேபியா அணி 2 கோல்களை அடித்து அர்ஜென்டினா அணிக்கு அதிர்ச்சி அளித்தது. இறுதிக் கட்டத்தில் அர்ஜென்டினாவில் கோல் அடிக்க முடியாமல் போகவே 2-1 என்ற கோல் கணக்கில் சவூதி அரேபியா இந்த போட்டியில் வெற்றி பெற்றது. உலக கால்பந்து அணிகளின் தரவரிசை பட்டியலில் 3 ஆம் இடத்தில் இருக்கும் அர்ஜென்டினாவை 51-வது இடத்திலிருக்கும் சவூதி அரேபியா வீழ்த்தியது, கால்பந்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

ஆனால், அதன்பிறகு நடைபெற்ற போட்டிகளில் அர்ஜென்டினா தனது ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதன் மூலம் நடப்பு உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கு தேர்வாகி இருக்கிறது அர்ஜென்டினா. இந்நிலையில், அந்த அணியின் பயிற்சியாளர் லியோனல் ஸ்கலோனி சவூதி அணியுடனான தோல்வி குறித்து மனம் திறந்திருக்கிறார்.

இதுபற்றி குரேஷியா அணியுடனான வெற்றிக்கு பிறகு பேசிய அவர்,"நாங்கள் சவூதி அரேபியாவிடம் தோற்ற பிறகு, எங்கள் ரசிகர்கள், எங்கள் மக்கள் ஆகியோரின் அன்பையும் ஆதரவையும் நாங்கள் உணர்ந்தோம். அது ஆச்சரியமாக இருந்தது. ஏனெனில் அது எங்களுக்குத் தேவையான வலிமையையும் ஆற்றலையும் கொடுத்தது. அதுவே அடுத்ததடுத்த போட்டிகளில் நாங்கள் வெற்றிபெறவும் காரணமாக அமைந்தது" என்றார்.

அரையிறுதி போட்டியில் குரேஷியாவை வென்ற அர்ஜென்டினா இறுதி போட்டியில் பிரான்ஸ் அணியை எதிர்த்து களமிறங்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

Also Read | தாத்தாவோட சுயசரிதையில் இருந்த பக்கங்கள்.. தமிழ்நாட்டை தேடிவந்த பிரிட்டன் நபர்.. மனதை நெகிழ வைத்த பின்னணி!!

LIONEL SCALONI, SAUDI ARABIA, FIFA, FIFA WC 2022

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்