உலக கோப்பை வென்ற அர்ஜென்டினா அணி வீரர்களுக்கு.. தங்க ஐ போன்கள் பரிசளிக்கும் மெஸ்ஸி?!.. வெளியான அதிரடி தகவல்!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

கத்தாரில் வைத்து கடந்த ஆண்டு நடந்து முடிந்த கால்பந்து உலக தொடரை மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி கைப்பற்றி அசத்தி இருந்தது.

Advertising
>
Advertising

                           Images are subject to © copyright to their respective owners.

Also Read | புஜாரா பேட்டிங்கால் ஆவேசமான ரோஹித்?.. அடுத்த ஓவரிலேயே சிக்ஸ் அடித்த புஜாரா.. சிவந்த முகம் சிரிக்க ஆரம்பிச்சுடுச்சு!!

இறுதி போட்டியில் அர்ஜென்டினா மற்றும் பிரான்ஸ் அணிகள் மோதி இருந்த சூழலில், ஒவ்வொரு நிமிடமும் விறுவிறுப்பாக செல்ல கடைசியில் பெனால்டி ஷூட் அவுட் வாய்ப்பை அர்ஜென்டினா அணி 4 - 2 என்ற கணக்கில் கைப்பற்றி 3 ஆவது முறையாக உலக கோப்பையை கைப்பற்றி அசத்தி இருந்தது.

கால்பந்து உலகின் தலைசிறந்த வீரராக கருத்தப்படும் அர்ஜென்டினா அணியின் கேப்டன் மெஸ்ஸி உலக கோப்பையை வென்றதையும் ரசிகர்கள் அதிகம் கொண்டாடி வருகின்றனர்.

Images are subject to © copyright to their respective owners.

உலக கோப்பை வென்ற அர்ஜென்டினா

இதற்கு காரணம், கால்பந்து போட்டிகளில் பல்வேறு சாதனைகள் படைத்த போதும் உலக கோப்பையை மெஸ்ஸியால் தொடவே முடியவில்லை. ஆனால், அவரது கடைசி உலக கோப்பை கால்பந்து தொடர் என கருதப்பட்ட இந்த முறை, கோல்கள் அடித்து அணியை சிறப்பாக வழிநடத்தி கோப்பையை வெல்லவும் உதவி செய்துள்ளார். அர்ஜென்டினா அணி வெற்றியை உலகெங்கிலுமுள்ள கால்பந்து ரசிகர்கள் கொண்டாடி இருந்தனர்.

மிகப் பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடந்த இந்த கால்பந்து தொடரில் ஆரம்பத்தில் இருந்தே அர்ஜென்டினா அணி வெற்றி பெற வேண்டும் என குறிப்பிட்டு வந்த சூழலில், அதனை மெஸ்ஸி அண்ட் கோ நிஜமாக்கி வரலாறு படைக்கவும் செய்திருந்தது. கால்பந்து உலக கோப்பை தொடர் முடிந்து ஒரு சில மாதங்கள் ஆனாலும் தொடர்ந்து கால்பந்து போட்டிகள் குறித்த பேச்சு இருந்து வரவும் செய்கிறது.

Images are subject to © copyright to their respective owners.

சிறந்த வீரர் விருது

அதே போல சமீபத்தில், கால்பந்து உலகக் கோப்பையில் சிறப்பாக செயல்பட்ட வீரர், வீராங்கனைகளுக்கு ஃபிஃபா அமைப்பு விருதையும் அறிவித்திருந்தது. இதில், அர்ஜென்டினா உலக கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்த கேப்டன் மெஸ்ஸி, சிறந்த ஃபிஃபா ஆண்கள் வீரர் விருதினை வென்றிருந்தார். ரசிகர்கள் மத்தியில் இந்த சம்பவம் வைரலாகி மெஸ்ஸிக்கு பாராட்டுக்களையும் பெற்று கொடுத்திருந்தது.

இந்த நிலையில், உலக கோப்பை வென்ற அர்ஜென்டினா அணி வீரர்கள் மற்றும் ஊழியர்களுக்காக மொத்தம் 35 தங்க ஐஃபோன்களை கேப்டன் லியோனல் மெஸ்ஸி பரிசாக வழங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Images are subject to © copyright to their respective owners.

தங்க ஐ போன் வழங்கும் மெஸ்ஸி

இது தொடர்பாக மேலும் வெளியான தகவல்களின் படி ஒவ்வொரு வீரரின் பெயர், எண் மற்றும் அர்ஜென்டினா லோகோ உள்ளிட்டவற்றை பொறிக்கப்பட்டு தனித்துவமான வகையில் இந்த ஐபோன் ஆர்டர் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. மேலும் மெஸ்ஸி ஆர்டர் செய்த இந்த ஐபோன்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு அவரது வீட்டில் டெலிவரி செய்யப்பட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றது. இரண்டு முறை கோல்டன் பால் வென்ற மெஸ்ஸியின் முயற்சி, நிச்சயம் இந்த சாதனையை நினைவுபடுத்துவதற்கு வகையில் இருக்கும் என்றும் பலரும் குறிப்பிட்டு வருகின்றனர்.

இந்த தங்க ஐபோன்கள் உருவாக்கிய iDesign Gold என்ற நிறுவனம், மெஸ்ஸி ஆர்டர் செய்த ஐ போன்கள் பற்றி பேசுகையில், இந்த அற்புதமான வெற்றியை கொண்டாட அனைத்து வீரர்களுக்கும் சிறப்பு பரிசும் வேண்டும் என்று மெஸ்ஸி கூறியதாகவும், வழக்கமான பரிசாக விரும்பாமல் இருக்க வேண்டும் என அவர் கூறியதால் தங்க ஐபோன்களில் பெயர் பொறிக்கப்பட்ட திட்டத்தை பரிந்துரை செய்ததும் மெஸ்ஸி அதனை விரும்பி ஏற்பாடுகளை கவனிக்க சொன்னதாகவும் தெரிவித்ததாக தகவல்கள் கூறுகின்றது.

Also Read | "ஐபிஎல் தொடரில் ஆடுவேன்".. பென் ஸ்டோக்ஸ் சொன்ன முக்கிய தகவல்.. கூடவே கோச் கொடுத்த அப்டேட்!

LIONEL MESSI, GOLD I PHONES, ARGENTINA TEAM

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்