"இதுதான் என்னோட கடைசி போட்டி"... ஓய்வை அறிவித்த மெஸ்ஸி.. அதிர்ச்சியில் கால்பந்து ரசிகர்கள்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

கால்பந்து உலகின் ஜாம்பவான் என அழைக்கப்படும் லியனல் மெஸ்ஸி நடப்பு உலகக்கோப்பை கால்பந்து தொடருடன் ஓய்வு பெற இருப்பதாக அறிவித்திருக்கிறார். இதனால் கால்பந்து ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

Advertising
>
Advertising

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட விளையாட்டு கால்பந்து. சாதாரண போட்டிகளுக்கே மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு இருக்கும். அப்படியிருக்க உலகக்கோப்பை என்றால் சொல்லவா வேண்டும்? மத்திய கிழக்கு நாடான கத்தாரில் இந்த ஆண்டுக்கான உலகக்கோப்பை கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த 2018 ஆம் ஆண்டு ரஷ்யாவில் கால்பந்து உலகக்கோப்பை நடைபெற்ற நிலையில், தற்போது கத்தாரில் துவங்கி நடைபெற்று வருகிறது.

நடப்பு உலகக்கோப்பை கால்பந்து தொடரின் அரையிறுதி சுற்றுக்குள் பிரான்ஸ், மொரோக்கோ, அர்ஜென்டினா மற்றும் குரேஷியா ஆகிய அணிகள் நுழைந்தன. நேற்று நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில் அர்ஜென்டினா குரேஷியாவை எதிர்த்து விளையாடியது. இதில் 3-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா வெற்றி பெற்று உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்குள் நுழைந்திருக்கிறது.

அர்ஜென்டினா அணியின் கேப்டன் மெஸ்ஸி மற்றும் அல்வரெஸ்-ன் தீயான ஆட்டம் காரணமாக அர்ஜென்டினா இறுதி போட்டிக்குள் நுழைந்திருக்கிறது. போட்டி முடிவடைந்த உடன் செய்தியாளர்களை சந்தித்த மெஸ்ஸி,"இறுதிப் போட்டிக்கு மீண்டும் ஒரு முறை தகுதி பெற்றது மகிழ்ச்சியாக உள்ளது.  எனது உலகக்கோப்பை பயணம் முடிவுக்கு வந்துவிட்டதாகவே கருதுகிறேன். அடுத்த உலககோப்பை போட்டிக்கு  இன்னும் 4 வருடங்கள் உள்ளது. அதில் பங்குபெற்றாலும்  சிறப்பாக  விளையாடி  அணியை இறுதிப்போட்டி வரை கொண்டு செல்வேனா என்று  தெரியாது. வரும் 18 ஆம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டியே என்னுடைய கடைசி போட்டியாக இருக்கும். அதில் உலககோப்பையை வென்று தருவேன் என நம்புகிறேன்" எனத் தெரிவித்திருக்கிறார்.

இதுவரையில், 6 முறை உலகக்கோப்பை இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ள அர்ஜென்டினா அணி இந்த முறை கோப்பையை கைப்பற்ற நிச்சயம் போராடும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், மெஸ்ஸி இந்த உலகக்கோப்பை தொடருடன் ஓய்வு பெற இருப்பதாக அறிவித்திருப்பது உலகம் முழுவதிலும் உள்ள அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

MESSI, FIFA, WORLDCUP

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்