"ஒரே ஓவர்'ல 28 ரன்னு.. அதுவும் அந்த சிக்ஸ் போன தூரம் இருக்கே.." லிவிங்ஸ்டன் அடித்த அடி.. வாயை பிளந்து பார்த்த ரசிகர்கள்

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதி இருந்த போட்டியில், பஞ்சாப் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றிருந்தது.

Advertising
>
Advertising

இந்த போட்டியில் முதலில் ஆடிய குஜராத் அணி, சிறிய இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது.

தமிழக வீரர் சாய் சுதர்ஷன் மட்டும் நிறைய ரன்கள் அடிக்க, மற்ற வீரர்களில் பெரும்பாலானோர், 20 ரன்களுக்குள் மட்டுமே அடித்தனர்.

சாய் சுதர்ஷன் செம ஆட்டம்..

இருபது ஓவர்கள் முடிவில், 8 விக்கெட்டுகளை இழந்த குஜராத், 143 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. மூன்றாவது வீரராக வந்து, கடைசி வரை களத்தில் நின்ற சாய் சுதர்ஷன், 50 பந்துகளில், ஒரு சிக்ஸர் மற்றும் 5 பவுண்டரிகளுடன் 65 ரன்கள் எடுத்திருந்தார். ஐபிஎல் தொடரில், தன்னுடைய முதல் அரை சதத்தையும் பதிவு செய்த சாய் சுதர்ஷனை பலரும் பாராட்டி வருகின்றனர். பஞ்சாப் அணி தரப்பில் ரபாடா, 4 விக்கெட்டுகளை எடுத்திருந்தார்.

சரவெடி காட்டிய லிவிங்ஸ்டன்

இதன் பின்னர் இலக்கை நோக்கி ஆடிய பஞ்சாப் அணி, ஆரம்பத்தில் இருந்தே சிறப்பாக ஆடியது. ஷிகர் தவான் 62 ரன்களும், பனுக்கா ராஜபக்ஷே 40 ரன்களும் எடுத்திருந்தனர். கடைசியாக வந்த லிவிங்ஸ்டன், 10 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 2 பவுண்டரிகளுடன் 30 ரன்கள் எடுத்து  பட்டையைக் கிளப்பி இருந்தார். அதிலும் குறிப்பாக, முகமது ஷமி வீசிய 16 ஆவது ஓவரில் லிவிங்ஸ்டன் செய்த சம்பவம், ஒட்டுமொத்த ஐபிஎல் ரசிகர்களையும் மிரண்டு போக செய்துள்ளது.

117 மீட்டர் சிக்ஸர்..

கடைசி ஐந்து ஓவர்களில், பஞ்சாப் அணியின் வெற்றிக்கு 27 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது ஷமி பந்து வீச வந்தார். இவர் முன்னதாக, 3 ஓவரில் 15 ரன்கள் மட்டுமே கொடுத்து ஒரு விக்கெட்டை கைப்பற்றி இருந்தார். தொடர்ந்து, அவரின் 4 ஆவது ஓவரில் முதல் 3 பந்துகளையும் சிக்சருக்கு அனுப்பினார் லிவிங்ஸ்டன். அதிலும் அவர் அடித்த முதல் சிக்ஸ், 117 மீட்டர் தூரத்திற்கு சென்றது. நடப்பு தொடரின் நீளமான சிக்ஸாகவும் இது பதிவானது. உடனடியாக அவரது பேட்டையும் ரஷித் கான் பரிசோதித்து பார்த்தார்.

மிரண்டு போன ரசிகர்கள்

அதே ஓவரில், இரண்டு பவுண்டரிகள் மற்றும் மூன்று சிக்ஸர்களுடன் 28 ரன்களை எடுத்து, அணியின் வெற்றியையும் சீக்கிரமாக முடித்து வைத்தார் லிவிங்ஸ்டன். அவர் அடித்த அடி, பலரையும் வாயை பிளக்க வைத்துள்ளது. இது தொடர்பான வீடியோக்களும் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

குஜராத் அணிக்கு எதிரான வெற்றியின் மூலம், ஐந்தாவது இடத்திற்கும் பஞ்சாப் அணி முன்னேறி உள்ளது குறிப்பிடத்தக்கது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்.. https://behindwoods.com/bgm8

GT VS PBKS, PUNJAB KINGS, IPL 2022, LONGEST SIX, LIAM LIVINGSTONE, லிவிங்ஸ்டன், சிக்ஸர்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்