ஜடேஜா மாதிரி தோனிக்கு மரியாதை செஞ்ச இந்திய கிரிக்கெட் ‘லெஜண்ட்’.. அதுக்கப்புறம் அவர் சொன்ன வார்த்தை..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

சிஎஸ்கே அணியின் விக்கெட் கீப்பர் தோனிக்கு ஜடேஜா போல இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் மரியாதை செய்தது இணையத்தில் கவனம் பெற்று வருகிறது.

Advertising
>
Advertising

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி சமீபத்தில் நடந்து முடிந்தது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக இளம் வீரர் திலக் வர்மா 51 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 32 ரன்களும் எடுத்தனர்.

இதனைத் தொடர்ந்து 156 எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி பேட்டிங் செய்த சென்னை அணிக்கு ஆரம்பமே அதிர்த்தி காத்திருந்தது. அதில் தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் கெய்க்வாட் டக் அவுட்டாகியும், மிட்செல் சான்ட்னர் 11 ரன்களிலும் அவுட்டாகினர். இதனை அடுத்து ராபின் உத்தப்பா 30 ரன்களும், அம்பட்டி ராயுடு 40 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இதனைத் தொடர்ந்து வந்த சிவம் துபே 13 ரன்களிலும், கேப்டன் ஜடேஜா 3 ரன்னிலும்ம் அடுத்தடுத்து வெளியேறினர்.

இந்த இக்கட்டான நிலையில், தோனி மற்றும் பிரெடோரியஸ் ஜோடி சேர்ந்தனர். இதில் 2 பவுண்டரி 1 சிக்சர் உட்பட 22 ரன்கள் எடுத்த பிரெடோரியஸ் கடைசி ஓவரின் முதல் பந்தில் ஆட்டமிழந்தார். அதனால் கடைசி 4 பந்துகளில் வெற்றிக்கு 16 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது களத்தில் இருந்த தோனி 6, 4, 2, 4 என அதிரடியாக விளையாடி சிஎஸ்கே அணியை வெற்றி பெற வைத்தார்.

இந்த நிலையில் போட்டி முடிந்ததும், சிஎஸ்கே கேப்டன் ஜடேஜா, தனது தொப்பியை கழற்றி தோனிக்கு தலைவணங்கினார். அப்போது இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், கிரிக்கெட் வர்ணனையாளருமான சுனில் கவாஸ்கர், ஜடேஜா போல் தோனிக்கு தலைவணங்கி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மேலும் இதுகுறித்து பேசிய சுனில் கவாஸ்கர், ‘அதுபோல் ஒரு குறிப்பிட்ட அழுத்தம் மிகுந்த சூழ்நிலையில் தோனியால் மட்டுமே அதை (பினிஷிங்) செய்ய முடியும். இதை நம்மால் செய்ய முடியாது என அவர் ஒரு நொடி கூட நினைக்கவில்லை. போட்டியை அவர் கடைசி வரை எடுத்துச் சென்றது அபாரமானது’ எனக் கூறியுள்ளார்.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்: https://www.behindwoods.com/bgm8/

MSDHONI, CSK, IPL, SUNIL GAVASKAR, CSKVMI

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்