ஐபிஎல் ப்ளே ஆஃப் சுற்றுக்கு ‘ஆப்பு’ வைத்த பிசிசிஐ.. இது யாருமே எதிர்பார்க்காத ட்விஸ்ட்.. வெளியான அதிரடி அறிவிப்பு..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

நடப்பு ஐபிஎல் தொடருக்கான லீக் போட்டிகளின் அட்டவணையை மாற்றி பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் நடைபெற்ற 14-வது சீசன் ஐபிஎல் (IPL) தொடர் கொரோனா தொற்று காரணமாக பாதியிலேயே நிறுத்தப்பட்டது. மொத்தம் 60 போட்டிகள் கொண்ட தொடரில் 29 போட்டிகள் மட்டுமே முடிவடைந்திருந்தது. இதனை அடுத்து எஞ்சிய போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த பிசிசிஐ (BCCI) முடிவு செய்தது. அதன்படி தற்போது போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இதுவரை நடந்த முடிந்த போட்டிகளில், 16 புள்ளிகளுடன் சென்னை அணி முதல் இடத்திலும், டெல்லி அணி இரண்டாவது இடத்திலும் உள்ளன. 12 புள்ளிகளுடன் பெங்களூரு அணி மூன்றாவது இடத்தில் உள்ளது. அதேபோல் 10 புள்ளிகளுடன் மும்பை மற்றும் கொல்கத்தா அணிகள் 4-ம் மற்றும் 5-ம் இடத்தில் உள்ளன. இதனை அடுத்து 8 புள்ளிகளுடன் பஞ்சாப் 6-வது இடத்திலும், ராஜஸ்தான் 7-வது இடத்திலும் உள்ளன. இதுவரை விளையாடிய 10 போட்டிகளில் 2-ல் மட்டுமே வெற்றி பெற்று ஹைதராபாத் அணி 4 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் இருந்து வருகிறது.

இதுவரை 42 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், கடைசி லீக் போட்டிகள் வரும் அக்டோபர் 8-ம் தேதி நடைபெற இருந்தது. இதில் பகல் 3:30 மணிக்கு அபுதாபி மைதானத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோத இருந்தன. அதேபோல் இரவு 7:30 மணிக்கு துபாயில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோத இருந்தன.

இந்த நிலையில் இந்த அட்டவணையில் பிசிசிஐ மாற்றம் செய்துள்ளது. அதன்படி, கடைசி நாளில் இரண்டு லீக் போட்டிகளும், ஒரே நேரத்தில் (இரவு 7:30 மணிக்கு) நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை ஏதாவது ஒரு அணிக்கு ரன்ரேட் அடிப்படையில் ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்ல வாய்ப்பு இருக்கும் பட்சத்தில், அவர்கள் கணித்து விளையாடிவிடுவார்கள் என மாற்றப்பட்டிருக்காலம் என கூறப்படுகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்