மும்பை அணியின் கில்லி இப்ப எங்க Team-ல… மாஸ்டர் பிளான் போட்டு தூக்கிய ராஜஸ்தான் ராயல்ஸ்

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் தொடர் தொடங்கவுள்ள நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தங்கள் அணியின் வேகப்பந்துவீச்சு பயிற்சியாளராக முன்னாள் மும்பை இந்தியன்ஸ் வீரரை நியமனம் செய்துள்ளது.

Advertising
>
Advertising

ஒரு பக்கம் தோனியின் அட்வைஸ்.. மறுபக்கம் சிக்ஸர்கள்.. சிங்கக்குட்டி மாதிரி தயாராகும் இளம் வீரர்.. "யாரு சாமி இந்த பையன்??.."

ஐபிஎல் 2022

ஐபிஎல் போட்டிகள் மார்ச் மாதம் 26 ஆம் தேதி முதல் நடக்க உள்ளன.  போட்டிகளுக்கான அட்டவணை சமீபத்தில் பிசிசிஐயால் வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவல் காரணமாக, கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் இரண்டாம் பாதி, ஐக்கிய அரபு அமீரகத்தில் வைத்து நடைபெற்றிருந்தது. அதற்கு முன்பு 2020 ஆம் ஆண்டு நடைபெற்றிருந்த ஐபிஎல் தொடர், கொரோனா தொற்றின் காரணமாக, முழுமையாக ஐக்கிய அரபு அமீரகத்தில் வைத்து தான் நடைபெற்றிருந்தது.

2 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில்

இந்நிலையில், இந்த முறை அனைத்து போட்டிகளும், இந்தியாவில் தான் நடைபெறுகிறது. இதனால், 2019 ஆம் ஆண்டுக்கு பிறகு, முழுமையாக இந்தியாவில் நடைபெறவுள்ள ஐபிஎல் தொடர் இது தான் .மொத்தமுள்ள 70 போட்டிகளில், 55 போட்டிகள், மும்பையின் மூன்று மைதானங்களான வான்கடே, ப்ராபவுர்ன் மற்றும் DY பாட்டில் மைதானங்களிலும், மீதமுள்ள 15 போட்டிகளை புனே மைதானத்திலும் நடக்க உள்ளது.

மும்பை இந்தியன்ஸ் சாதனை

இதுவரை நடந்துள்ள ஐபிஎல் தொடர்களில் ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை அணி 5 முறை கோப்பையை வென்று சாதனைப் படைத்துள்ளது. மும்பைக்கு அடுத்த இடத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 முறை கோப்பையை வென்று இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்த இரண்டு அணிகளும் ஐபிஎல் தொடரில் ஆதிக்கம் செலுத்தும் அணிகளாக இருந்து வருகின்றன.

மும்பை அணியின் கில்லி

மும்பை அணியின் வெற்றிகளில் முக்கியப் பங்காற்றியவர்களில் ஒருவர் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா. பல போட்டிகளில் இக்கட்டான நிலையில் சிறப்பாக பந்துவீசி அணியை வெற்றிப் பெற வைத்துள்ளார். ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்களை வீழ்த்திய பந்துவீச்சாளர்களில் அவரும் ஒருவராக இருக்கிறார். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அவர் ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெற்றார். சர்வதேசப் போட்டிகளில் இருந்தும் ஓய்வை அறிவித்துவிட்டார்.

ராஜஸ்தான் ராயல்ஸில் மலிங்கா

இந்நிலையில் இந்த ஆண்டு அவரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் தங்கள் அணியின் வேகப்பந்து வீச்சாளர்களுக்கான பயிற்சியாளராக நியமித்துள்ளது. இந்த அணியின் பந்துவீச்சுக்கு கூடுதல் பலத்தை அளிக்கும் என நம்பலாம். இது சம்மந்தமாக பிங்க் நிற உடையில் மலிங்கா அமர்ந்திருக்கும் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் ஐபிஎல் தொடர் தொடங்கிய போது முதல் கோப்பையை வென்றது. அதற்கு பின்னர் மறுமுறை அந்த அணி கோப்பையை இன்னும் வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

"ரொம்ப ஆசைப்பட்டேன், கடைசியில".. ஓய்வுக்கு முன்பு விருப்பப்பட்ட ஸ்ரீசாந்த்.. "ஆனா, அதுவும் நடக்காம போயிடுச்சு"

CRICKET, LASITH MALINGA, BOWLING COACH, RAJASTHAN ROYALS, மும்பை அணி, ராயல்ஸில் மலிங்கா

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்