ஒரே வீடியோவால் பிரபலமான கோலியின் தீவிர Fan Girl.. அடிச்ச ஷாட்களை பாத்துட்டு அரசு கொடுத்த பரிசு.. சிலிர்த்துப்போன ரசிகர்கள்.!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான விராட் கோலியே தனது ஆதர்சம் எனக் கூறியிருந்த லடாக் சிறுமிக்கு பரிசு வழங்கி ஊக்கப்படுத்தியுள்ளது அந்த பிராந்திய விளையாட்டுத்துறை. இதனால் அந்த சிறுமியின் பள்ளியில் படிக்கும் மாணவிகளும் உற்சாகம் அடைந்துள்ளனர்.

Advertising
>
Advertising

விராட் கோலியின் ரசிகை

லடாக் பகுதியை சேர்ந்தவர் மக்சூமா (Maqsooma). இவர் கார்கிலில் உள்ள கக்சார் மேல்நிலைப்பள்ளியில் தற்போது ஆறாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் விராட் கோலியின் தீவிர ரசிகை ஆவார். கோலியின் கிரிக்கெட் விளையாட்டை பார்த்து ரசிப்பதுடன் மட்டுமில்லாமல், இந்த வயதிலேயே பேட்டிங்கிலும் அதிரடி காட்டுகிறார் மக்சூமா. தனது பள்ளியில் மக்சூமா கிரிக்கெட் ஆடும் வீடியோ ஒன்றை லடாக் பள்ளிக்கல்வி இயக்குநரகம் தங்களின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தது.

அந்த வீடியோவில்,"எனது தந்தை என்னை வீட்டில் கிரிக்கெட் விளையாட ஊக்குவிக்கிறார். பள்ளியிலும் நான் கிரிக்கெட் விளையாட ஆசிரியர்கள் ஆதரவு தருகின்றனர். விராட் கோலியை போல விளையாட அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன். எனக்கு பிடித்த கிரிக்கெட் வீரரும் அவர் தான். நான் சிறு வயதில் இருந்தே கிரிக்கெட் விளையாடி வருகிறேன். மேலும் ஹெலிகாப்டர் ஷாட் ஆடுவது எப்படி என்று நான் கற்று வருகிறேன்" என மக்சூமா தெரிவித்திருந்தார்.

 

வைரலான வீடியோ

இந்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவியது. இந்நிலையில், இந்த வீடியோவை கவனித்த லடாக் யூனியன் பிரதேசத்தின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை மக்சூமா படிக்கும் பள்ளிக்கு கிரிக்கெட் கிட்டை பரிசாக அளித்திருக்கிறது. இதுகுறித்து பேசிய லடாக் யூனியன் பிரதேசத்தின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறையின் செயலாளர் ராம் குமார்,"கிரிக்கெட் என்பது ஒரு குழு விளையாட்டு. மக்சூமா போன்ற மாணவர்களின் தனிப்பட்ட திறன்களை வளர்த்து அவர்களை ஒரு குழுவாக விளையாட ஊக்குவிக்க வேண்டும்" என்றார்.

அதேபோல, லடாக் பகுதியில் மக்சூமா போன்று விளையாட்டில் ஆர்வம் கொண்டோரை கவனித்து அவர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் அளிக்கவும், அந்த பகுதியின் விளையாட்டு சார்ந்த உட்கட்டமைப்பை அதிகரிக்கவும் முயற்சிகள் எடுத்துவருவதாக ராம் குமார் தெரிவித்திருக்கிறார்.

விராட் கோலி போல விளையாடவேண்டுமென தெரிவித்திருந்த அவரது தீவிர ரசிகைக்கு, அரசே உதவியிருப்பது கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்திருக்கிறது.

 

VIRAT KOHLI, FANGIRL, GIFT, VIDEO

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்