கையில் கோல்டன் பூட்.. பக்கத்துல உலக கோப்பை.. இரண்டே வார்த்தையில் எம்பாப்பே Viral ட்வீட்..

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

கத்தாரில் நடைபெற்ற கால்பந்து உலக கோப்பை தொடரை அர்ஜென்டினா அணி கைப்பற்றி இருந்தாலும் இறுதி போட்டியில் பிரான்ஸ் அணி வீரர் எம்பாப்பே கொடுத்த அதிர்ச்சியை நிச்சயம் யாராலும் அவ்வளவு எளிதில் கடந்து செல்ல விட முடியாது.

Advertising
>
Advertising

Also Read | "நான் ஒரு தாய் தான், ஆனா அதே நேரத்துல".. குழந்தையுடன் சட்டப்பேரவைக்கு வந்த பெண் MLA!!

முதல் பாதியில் இரண்டு கோல்கள் அடித்து அர்ஜென்டினா அணி ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்க இரண்டாவது பாதியில் 2 நிமிட இடைவெளிக்கு மத்தியில் இரண்டு கோல்களை அடித்து அனைவருக்கும் அதிர்ச்சி அளித்திருந்தார் பிரான்ஸ் வீரர் எம்பாப்பே. இதன் பின்னர் அர்ஜென்டினா வீரர் மெஸ்ஸி கூடுதல் நேரத்தில் ஒரு கோல் அடிக்க, போட்டி முடிய ஒரு சில நிமிடங்கள் இருக்கும் போது தனது மூன்றாவது கோலை அடித்தார் எம்பாப்பே.

இதனால் பெனால்டி சூட் அவுட் வாய்ப்பு வரை சென்றது. கடைசியில் 4 -2 என்ற கணக்கில் வெற்றி பெற்று கால்பந்து உலக கோப்பையை மூன்றாவது முறையாக கைப்பற்றியது அர்ஜென்டினா அணி. ஒரு பக்கம், அர்ஜென்டினா வெற்றி பெற்றிருந்தாலும் தனி ஒரு ஆளாக பிரான்ஸ் வீரர் எம்பாப்பே அர்ஜென்டினாவை எதிர்த்து போராடியது பற்றியும் தற்போது வரை கால்பந்து ரசிகர்கள் பேசி வருகின்றனர்.

கடந்த 2018 ஆம் ஆண்டு உலக கோப்பை கால்பந்து தொடரை பிரான்ஸ் அணி வெல்ல காரணமாக இருந்த எம்பாப்பே, தொடர்ந்து ஒரு நட்சத்திர வீரராக உருவாகி வரும் நிலையில் ரசிகர்கள் பலரும் பாராட்டியும் வருகின்றனர். உலக அளவில் எம்பாப்பே கவனம் பெற்றுள்ள நிலையில், உலக கோப்பை கால்பந்து தொடரில் தங்களின் தோல்விக்கு பின்னர் எம்பாப்பே செய்துள்ள ட்வீட், தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

2018 மற்றும் 2022 ஆகிய ஆண்டுகளில் நடந்த கால்பந்து உலக கோப்பை தொடரின் இறுதி போட்டியில் பிரான்ஸ் அணிக்காக பெரிய அளவில் போராடிய இளம் வீரர் தான் எம்பாப்பே. 24 வயதில் இப்படி ஒரு ஆதிக்கத்தை கால்பந்து போட்டிகளில் எம்பாப்பே செயல்படுத்தி வருவதால், அடுத்த சில ஆண்டுகளில் நிச்சயம் தவிர்க்க முடியாத கால்பந்து வீரராக எம்பாப்பே உருவெடுப்பார் என்றும் ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.

அப்படி ஒரு சூழலில், இறுதி போட்டியின் தோல்விக்கு பின்னர் ட்வீட் செய்த எம்பாப்பே, "திரும்பி வருவோம்" என குறிப்பிட்டுள்ளார். மேலும் உலக கோப்பைத் தொடரில், 8 கோல்கள் அடித்து கோல்டன் பூட் விருதை வென்ற கிலியன் எம்பாப்பே, அந்த விருதுடன் நிற்க, அவர் அருகே உலக கோப்பையும் இருக்கிறது. இந்த புகைப்படத்தை பகிர்ந்து தான் திரும்ப வருவோம் என்று எம்பாப்பே குறிப்பிட்டுள்ளார்.

Also Read | சண்டை போட்டு மெஸ்ஸிக்கு சான்ஸ் வாங்கிய பாட்டி.. "கோல் முடிச்சதும் வானத்தை பார்த்து கொண்டாடுறது இதுனால தான்".. சுவாரஸ்ய தகவல்

KYLIAN MBAPPE, KYLIAN MBAPPE TWEET, FIFA WORLD CUP

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்