‘கோலி அப்படி சொல்லவே இல்ல’!.. ‘அவர் நல்லா கதை அளந்து விட்டிருக்காரு’.. ஆர்சிபி வீரர் கொடுத்த ‘தரமான’ பதிலடி..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

நடப்பு ஐபிஎல் தொடர் வலை பயிற்சியின் போது விராட் கோலி டியூக் பந்துகளை கொண்டு பந்துவீச சொன்னதாக எழுந்த சர்ச்சைக்கு கெயில் ஜேமிசன் விளக்கம் கொடுத்துள்ளார்.

இங்கிலாந்தில் நடந்து முடிந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியாவை வீழ்த்தி நியூஸிலாந்து அணி வெற்றி பெற்றது. இதன்மூலம் ஐசிசி நடத்தும் கிரிக்கெட் தொடர்களில் முதல்முறையாக கோப்பையை கைப்பற்றி நியூஸிலாந்து அணி வரலாறு படைத்துள்ளது.

இப்போட்டியில் நியூஸிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் கெயில் ஜேமிசன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இரண்டு இன்னிங்ஸிலும் சேர்த்து மொத்தம் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதனால் அவருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. குறிப்பாக இப்போட்டியில், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இவரது ஓவரில்தான் இரண்டு முறையும் அவுட்டானார். தற்போது நடைபெறும் ஐபிஎல் தொடரில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் கெயில் ஜேமிசன் விளையாடி வருகிறார்.

இந்த நிலையில் ஐபிஎல் தொடரின் வலைப்பயிற்சியின் போது, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் பயன்படுத்தப்பட்ட டியூக் பந்துகளைக் கொண்டு கெயில் ஜேமிசனை பந்துவீச சொல்லி விராட் கோலி பயிற்சி எடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதை பெங்களூரு அணியில் விளையாடி வரும் ஆஸ்திரேலிய வீரர் டேன் கிறிஸ்டியன் கடந்த மாதம் தெரிவிக்கவே, அது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இதுதொடர்பாக கெயில் ஜேமிசன் தற்போது விளக்கம் கொடுத்துள்ளார். அதில், ‘ஒரு நல்ல கதைக்கு சுவாரஸ்யத்தை சேர்க்கும் நோக்கில், டேன் கிறிஸ்டியன் அப்படி சொல்லியிருப்பார் என்று நான் நினைக்கிறேன். ஐபிஎல் தொடரின் தொடக்கத்தில் இங்கிலாந்து சுற்றுப்பயணம் மற்றும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் குறித்து பேசினோம். அப்போது டியூக் பந்துகள் குறித்தும் பேசினோம். ஆனால் டியூக் பந்துகளை வீச சொல்லி அவர் எதுவும் கேட்கவில்லை. இதுவொரு நல்ல மிகச்சிறந்த கற்பனை கதை’ என கெயில் ஜேமிசன் பதிலடி கொடுத்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்