இவரையா ‘இத்தன’ நாளா எறக்கி விடாம இருந்தீங்க.. முதல் போட்டியே ‘தாறுமாறு’.. அப்போ ‘ப்ளே ஆஃப்’ போக சான்ஸ் இருக்கா..?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி த்ரில் வெற்றி பெற்றது.

ஐபிஎல் தொடரின் 31-வது லீக் போட்டி இன்று (15.10.2020) ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்றது. இதில் விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணியும், கே.எல்.ராகுல் தலைமையிலான பஞ்சாப் அணியும் மோதின. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 171 ரன்களை எடுத்தது. இதில் அதிகபட்சமாக விராட் கோலி 48 ரன்கள் எடுத்தார்.

இதனை அடுத்து 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய கே.எல்.ராகுல், மயங்க் அகர்வால் ஆரம்பம் முதலே அதிரடியாக ஆட ஆரம்பித்தனர். இதில் மயங்க அகர்வால் 45 ரன்களில் அவுட்டாக, அடுத்து கிறிஸ் கெயில் களமிறங்கினார்.

இந்த ஐபிஎல் சீசனில் கிறிஸ் கெய்ல் விளையாடும் முதல் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. ஆரம்பத்தில் சற்று தடுமாறிய கெயில், சட்டென தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த ஆரம்பித்தார். இதனால் தான் விளையாடிய முதல் போட்டியிலேயே அரைசதம் (53 ரன்கள்- 5 சிக்ஸர், 1 பவுண்டரி) அடித்து அசத்தினார். இந்த நிலையில் 20 ஓவர்கள் முடிவில் 177 ரன்கள் அடித்து பஞ்சாப் அணி அபார வெற்றி பெற்றது. இதுவரை விளையாடிய 8 போட்டிகளில் 2-ல் மட்டுமே பஞ்சாப் அணி வெற்றி பெற்றுள்ளது. அதனால் இனி விளையாடும் அனைத்து போட்டிகளிலும் பஞ்சாப் வெற்றி பெரும் பட்சத்தில் ப்ளே ஆஃப் செல்ல வாய்ப்பு உள்ளது. இந்த நிலையில் விளையாடிய முதல் போட்டியிலேயே கெயில் அதிரடியாக ஆடியதை குறிப்பிட்டு, இது அப்படியே தொடர்ந்தால் பஞ்சாப் அணி ப்ளே ஆஃப் செல்ல வாய்ப்பு இருக்கும் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்