தோனி கீப்பரா நின்னப்போ நடந்த அதே விஷயம்.. "3 வருஷம் கழிச்சு குல்தீப் செஞ்ச மேஜிக்".. இணையத்தை கலக்கும் வீடியோ!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான டி 20 தொடர் முடிவடைந்த நிலையில், தற்போது ஒரு நாள் தொடர் ஆரம்பமாகி உள்ளது.

Advertising
>
Advertising

ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் தொடரில் களமிறங்கியது. இன்று (06.10.2022) நடைபெற்ற முதல் ஒரு நாள் போட்டி மழை காரணமாக 40 ஓவர்களாக குறைக்கப்பட்டிருந்தது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி, ஆரம்பத்தில் இருந்தே மெல்ல மெல்ல ரன்கள் சேர்த்தது. இறுதியில், டேவிட் மில்லர் மற்றும் ஹென்ரிச் கிளாசீன் ஆகியோர் அதிரடியாக ஆடி ரன் எடுத்தனர். இறுதி வரை அவர்கள் களத்தில் நின்ற நிலையில், மில்லர் 75 ரன்களும், கிளாசீன் 74 ரன்களும் எடுத்திருந்தனர். இதனால், தென் ஆப்பிரிக்க அணியும் 40 ஓவர்கள் முடிவில், 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 249 ரன்கள் எடுத்திருந்தது.

இதன் பின்னர் இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி, விக்கெட்டுகளை இழந்த வண்ணம் இருந்தது. ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் அரை சதமடித்திருந்தனர். இருந்த போதும், 40 ஓவர்கள் முடிவில், 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 240 ரன்கள் மட்டுமே இந்திய அணியால் சேர்க்க முடிந்தது. அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 86 ரன்கள் எடுத்திருந்தார். இதன் மூலம், தென் ஆப்பிரிக்க அணி, 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில், இந்திய சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் வீசிய பந்து தொடர்பான செய்தி, தற்போது கிரிக்கெட் ரசிகர்கள் பலரையும் வெகுவாக கவர்ந்து வருகிறது. இந்த போட்டியில் 8 ஓவர்கள் வீசிய குல்தீப் யாதவ், 39 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டினை கைப்பற்றி இருந்தார்.

16 ஆவது ஓவரை குல்தீப் யாதவ் வீசிய போது, தென் ஆப்பிரிக்க வீரர் மார்க்ரம் பேட்டிங் செய்து கொண்டிருந்தார். அப்போது, ஆப் சைடு வெளியே குல்தீப் வீசிய பந்து, அப்படியே வேகமாக திரும்பி ஸ்டம்பை பதம் பார்த்தது. இதனை மார்க்ரம் சற்றும் எதிர்பாராத நிலையில், ரன் எதுவும் எடுக்காமல் அவர் பெவிலியன் திரும்பினார். ஒரு மேஜிக் பந்தை தான் குல்தீப் வீசி இருந்தார்.

மேலும், இதே போன்றதொரு மேஜிக் பந்தை தான் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு குல்தீப் அப்படியே வீசி இருப்பார். 2019 ஆம் ஆண்டு உலக கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி மோதி இருந்தது. இந்த போட்டியில், பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் விக்கெட்டை இப்படியே தான் குல்தீப் யாதவ் வீழ்த்தி இருப்பார். அப்போது, விக்கெட் கீப்பராக முன்னாள் கேப்டன் தோனி செயல்பட்டிருந்தார்.

இதனையடுத்து, மூன்று ஆண்டுகள் கழித்து அதே பந்தை குல்தீப் யாதவ் வீசி விக்கெட் எடுத்துள்ள நிலையில், இது தொடர்பான இரண்டு வீடியோக்களையும் ரசிகர்கள் ஒப்பிட்டு வருகின்றனர்.

 

MSDHONI, KULDEEP YADAV, IND VS SA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்