'நல்லா விளையாடுற மனுஷன், இன்னைக்கும் டீம்ல இல்ல'... 'ஏன் வேணும்ன்னு கட்டம் கட்டுறீங்களா'?... கொந்தளித்த ரசிகர்கள்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை வெற்றிகரமாக முடித்துள்ள இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்து அணிக்கு எதிராக முதல் டெஸ்ட் போட்டியில் இன்று களமிறங்கியுள்ளது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் செய்து வரும் நிலையில், இந்திய வீரர் ஒருவர் ஆடும் லெவனில் இன்று இடம்பெறாமல் போனது கடும் பரபரப்பை ரசிகர்கள் மத்தியில் உருவாக்கியுள்ளது.

இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம்பெற்றிந்த சுழற்பந்து வீச்சாளர் அக்சர் படேல், காயம் காரணமாக இன்றைய போட்டிக்கு முன்னதாக விலகிய நிலையில், அவருக்கு பதிலாக குல்தீப் யாதவ் அணியில் இன்று களமிறங்குவார் என எதிர்பார்த்தனர்.

ஆனால், யாரும் எதிர்பாராத விதமாக, 15 பேர் அணியில் இல்லாத சபாஷ் நதீமை இன்றைய போட்டியில் இந்திய அணி களமிறக்கியது. கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக ஆடிய குல்தீப் யாதவ், பல போட்டிகளில் களமிறக்கப்படவில்லை. அதே போல, சமீபத்தில் நடந்து முடிந்த ஆஸ்திரேலிய தொடரிலும் குல்தீப்பிற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

அதிக அனுபவமுள்ள குல்தீப் யாதவிற்கு வாய்ப்பு வழங்கப்படாமல், புதிய வீரர்களே அணியில் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றனர். இதனால் அவர் நிச்சயம் மனவேதனைக்கு ஆளாகியிருப்பார் என ரசிகர்கள் வருத்ததுடன் குல்தீப் யாதவிற்கு ஆதரவாக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தனது கடைசி டெஸ்ட் போட்டியில் ஆடியிருந்த குல்தீப் யாதவ், 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.











 

அதன் பிறகு, அவருக்கு வாய்ப்பே வழங்கப்படாமல் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்