"'தோனி' இருக்கற வரைக்கும், செம 'ஃபார்ம்'ல இருந்த மனுஷன்!.. இப்போ இப்டி சொதப்பிட்டு இருக்காரே.." 'இந்திய' வீரரை நினைத்து வருந்திய 'வாகன்'!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇங்கிலாந்து அணிக்கு எதிராக, ஏற்கனவே நடந்து முடிந்த டெஸ்ட் மற்றும் டி 20 தொடரை இந்திய அணி கைப்பற்றியிருந்த நிலையில், நேற்று நடந்த இறுதி ஒரு நாள் போட்டியையும் வென்று, அந்த தொடரையும் இந்திய அணி சொந்தமாகியுள்ளது.
முதல் இரண்டு போட்டிகளில் களமிறங்கிய லெக் ஸ்பின்னர் குல்தீப் யாதாவிற்கு பதிலாக, கடைசி போட்டியில், தமிழக வீரர் நடராஜன் களமிறங்கியிருந்தார். இதற்கு காரணம், முதல் ஒரு நாள் போட்டியில், 9 ஓவர்கள் வீசிய குல்தீப், விக்கெட்டுகள் எதையும் எடுக்காமல், 68 ரன்கள் கொடுத்தார்.
அதே போல, இரண்டாவது போட்டியில், 10 ஓவர்களை வீசி 84 ரன்களை வாரி வழங்கிய நிலையில், அந்த போட்டியில் இங்கிலாந்து அணியும் எளிதாக வெற்றி கண்டது. இதனால் தான், கடைசி ஒரு நாள் போட்டியில், அவருக்கு பதிலாக, நடராஜனை இந்திய அணி களமிறக்கியிருந்தது.
ஒரு சமயத்தில், அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் சிறந்த சுழற்பந்து வீச்சாளராக வலம் வந்த குல்தீப் யாதவ் (Kuldeep Yadav), இந்த தொடரில் சொதப்பியதால், கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறார்.
இந்நிலையில், இதுபற்றி பேசிய இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் (Michael Vaughan), 'குல்தீப் யாதவை பார்க்கையில், தன்னை இன்னும் மேம்படுத்திக் கொள்வார் என எனக்குத் தோன்றவில்லை. அவர் ஒரே இடத்தில் தான் தற்போது வரை இருக்கிறார்.
ஐபிஎல் போட்டிகள் ஆனாலும், சர்வதேச போட்டிகள் ஆனாலும், ஒருவர் தனது பந்து வீச்சில், வித்தியாசமாக எதையேனும் செய்து கொண்டிருக்க வேண்டும். அப்படியில்லை என்றால், அதிலும் குறிப்பாக ஒரு லெக் ஸ்பின்னர், பந்தின் வேகத்திலும், வீசும் கோணத்திலும் மாற்றத்தைக் காட்ட வேண்டும். இல்லையெனில், அவரது கேரியர் கஷ்டம் தான்.
எம்.எஸ். தோனி (MS Dhoni) விக்கெட் கீப்பராக இருக்கும் வரை, தனது பந்து வீச்சிற்கு ஆலோசனை வழங்கி, உதவி செய்ய இருக்கிறார் என்ற கட்டத்தில், மிக கச்சிதமாக குல்தீப் பந்து வீசிக் கொண்டிருந்தார். தோனி சென்ற பின்பு, குல்தீப் யாதவ் பந்து வீச்சு, மொத்தமாக எடுபடவில்லை' என வாகன் தெரிவித்துள்ளார்.
வாகன் சொன்னதை போல, தோனி இருக்கும் வரை, அவரது வழிகாட்டுதலின் படி, சிறப்பாக பந்து வீசி வந்த குல்தீப் யாதவ், கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் இருந்தே கடுமையான தடுமாற்றத்தை சந்தித்து வருகிறார்.
இந்திய அணியிலும், தற்போது அதிக சுழற்பந்து வீச்சாளர்கள் வரிசையில் உள்ளதால், இனிமேல் குல்தீப் யாதவுக்கான வாய்ப்பு எப்படி என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'பாஸ், நீங்க என்ன கர்ணன் பரம்பரையா?'... 'செம கடுப்பான ரசிகர்கள்'... மோசமான சாதனையை சொந்தமாக்கிய இந்திய வீரர்!
- "இன்னைக்கி இந்தியா 'டீம்' இப்டி சிறப்பா இருக்குன்னா... அதுக்கு அவரு ஒருத்தரு தான் 'முக்கிய' காரணம்.. பாராட்டித் தள்ளிய 'வாகன்'!! "யாரா இருக்கும்??"
- ரசிகர்களுக்கு 'சிஎஸ்கே' அணி கொடுத்த அசத்தல் 'சர்ப்ரைஸ்'!... வைரலாகும் வேற லெவல் 'வீடியோ'!!
- 'தோனி' என்கிட்ட சொன்ன மிக முக்கியமான 'விஷயம்'.. "ப்பா, மனுஷன் எவ்ளோ நேர்மையா இருக்காரு பாருங்க.." நெகிழ்ந்து போன 'உத்தப்பா'!!
- 'ரசிகர்களை கடுப்பேத்துற மாதிரி ட்வீட் போட்டாலும்...' 'அப்பப்போ நல்ல ட்வீட்களையும் போட தான் செய்றாரு...' 'உலகத்துலையே பெஸ்ட் பவுலர் அவர் தான் என...' இந்திய பவுலரை புகழ்ந்த வாகன்...!
- "அட, என்னங்க இவரு.. எப்பவும் எதையாவது சொல்லிட்டே இருக்காரு..." மீண்டும் 'வாகன்' போட்ட 'ட்வீட்'... கோபத்தின் உச்சத்திற்கே சென்ற 'ரசிகர்கள்'!!
- 'எனக்கு டவுட்டே இல்ல...' 'மூணு one day மேட்ச்லையும் யாரு ஜெயிக்க போறாங்கன்னு guess பண்ணிட்டேன்...' - மைக்கேல் வாகன் போட்ட வைரல் ட்வீட்...!
- "ஒரு 'மேட்ச்' கூட முடியல, அதுக்குள்ளயா??..." பரபரப்பை ஏற்படுத்திய 'வாகனின்' 'ட்வீட்'!.. கடுப்பான 'இந்திய' ரசிகர்கள்!!
- "அவரு எப்பேர்பட்ட பிளேயர் தெரியுமா??.. அவர வெச்சு என்னய்யா பண்ணிட்டு இருக்கீங்க??..." கடுப்பான 'வாகன்'... 'பரபரப்பு' சம்பவம்!!
- 'அவங்க ரெண்டு பேரும் டீம்ல இருந்தா...' 'கண்டிப்பா இந்தியா டி20 வேர்ல்டு கப் ஜெயிச்சிடும்...' - மைக்கேல் வாகன் சொல்ற அந்த 2 பேரு யாரு தெரியுமா...?