‘நன்றாக ஆடினாலும், அவர ஏன் எடுக்கல?’... 'இளம் வீரர் குறித்து, தேர்வுக்குழுத் தலைவர்'!
முகப்பு > செய்திகள் > விளையாட்டு‘ஆந்திராவைச் சேர்ந்த விக்கெட் கீப்பரும், பேட்ஸ்மேனுமான கேஎஸ் பரத், வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணித் தேர்வின் போது, கடும் போட்டியாக விளங்கினாலும், அவர் எடுக்கப்படாததற்கான காரணத்தை,’ தேர்வுக்குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் தெரிவித்துள்ளார்.
வரும் ஆகஸ்ட் மாதம் மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி, அங்கு டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் ஆகிய மூன்று போட்டிகளில், விளையாட உள்ளது. இந்த தொடர்களுக்கான இந்திய அணி கடந்த ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டது. டெஸ்ட் அணியில் முதன்மை விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட் தேர்வு செய்யப்பட்டுள்ளார். காயத்தால் கடந்த ஓராண்டுக்கும் மேலாக இந்திய அணியில் இடம்பெறாமல் இருந்த விருத்திமான் சஹா, காயத்திலிருந்து மீண்டு முழு உடற்தகுதியை பெற்றிருப்பதால், மாற்று விக்கெட் கீப்பராக அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் உள்நாட்டு போட்டிகளிலும், இந்தியா ‘ஏ’ அணியிலும் தொடர்ந்து சிறப்பாக ஆடிவரும் ஆந்திராவை சேர்ந்த கே.எஸ்.பரத், அணியில் எடுக்கப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக பேசப்பட்டது. ஆனால் அவர் அணியில் எடுக்கப்படவில்லை. சஹா உடற்தகுதி பெற்றுவிட்டதால் அவரை நீக்க முடியாது என்பதால் அவரே இடம்பிடித்துள்ளார். இதுகுறித்து விளக்கமளித்த தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத், ‘இந்தியா ஏ அணியில் ஆடும் வீரர்களின் ஆட்டங்கள் கருத்தில் எடுத்துக்கொள்ளப்படுகின்றன. அதனால் தான் ஷ்ரேயாஸ் ஐயர், மனீஷ் பாண்டே ஆகியோர் அணியில் இடம்பிடித்தனர். கே.எஸ்.பரத் அபாரமாக ஆடிவருகிறார். அவர் அணியில் கிட்டத்தட்ட தேர்வு செய்யப்பட்டார் என்றே கூற வேண்டும்.
ஆனால் சீனியர் வீரர் காயத்தில் இருந்து மீண்டு முழு உடற்தகுதி பெற்றிருந்தால் அவருக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அதனடிப்படையில் தான் சஹா எடுக்கப்பட்டார். ஆனால் கேஎஸ் பரத் அபாரமாக ஆடிவருகிறார். இந்தியா ஏ அணியில் ஆடி 3 சதங்கள் மற்றும் விக்கெட் கீப்பிங்கில் 50 டிஸ்மிஸல்கள் என மிரட்டியுள்ளார். கிட்டத்தட்ட அணியில் இடம்பெற்றுவிட்டார் என்றே கூற வேண்டும். ஆனால் சஹா சீனியர் வீரர் என்பதன் அடிப்படையில் அவர் அணியில் இடம்பிடித்தார்’ என்று பிரசாத் விளக்கமளித்தார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘போட்டிக்கு 200 ரூபாயில் இருந்து இந்திய அணி வரை..’ பிரபல ஐபிஎல் பௌலரின் அசத்தல் பயணம்..
- ‘நோ பால்’ மூலம் ஏற்படும் விக்கெட்டுக்கு முற்றுப்புள்ளி..! புதிய விதியை கொண்டுவரும் ஐசிசி..!
- கிரிக்கெட்டில் இருந்து தோனி ஓய்வு..? பதிலளித்த தேர்வுக்குழு தலைவர்..!
- 'ஓரவஞ்சனயெல்லாம் இல்ல'.. 'அம்பதி ராயுடுவின் 3D கண்ணாடி ட்வீட்'.. மனம் திறந்த கிரிக்கெட் பிரபலம்!
- ‘வெஸ்ட் இண்டீஸ் தொடர்’... ‘இந்திய அணி அறிவிப்பு!’
- ‘இந்திய அணியின் புதிய பேட்டிங் பயிற்சியாளர்’.. விண்ணப்பித்துள்ள கிங்ஸ் லெவன் பஞ்சாப் கோச்..!
- ‘வெஸ்ட் இண்டீஸ் எதிரான தொடர்’.. முன்னணி வீரர்கள் விளையாடுவது சந்தேகம்..!
- ‘தல’ தோனியின் ‘அதிரடி முடிவு..’ பிசிசிஐ தரப்பிலிருந்து வெளியாகியுள்ள புதிய தகவல்..
- ‘கடின உழைப்புக்கு மாற்றே இல்லை..’ வைரலாகும் விராட் கோலியின் பயிற்சி வீடியோ..
- ‘இனி கேப்டனும் பயிற்சியாளருமே இதில் முடிவெடுக்கலாம்..’ குழு சொன்னதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பிசிசிஐ..