"ஜெயிச்சுட்டடா மகனே..".. மைதானத்தில் வீரரின் தாய் உருக்கம்.. நெகிழ்ச்சி பின்னணி!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

மிகப் பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் தற்போது ஆரம்பமாகி உள்ளது.

                                               Images are subject to © copyright to their respective owners

Advertising
>
Advertising

4 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் டிராபி, இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா என இரண்டு நாட்டு ரசிகர்களும் மிக உன்னிப்பாக கவனிக்கும் தொடராகும். அதிலும் தற்போது ஆரம்பமாகி உள்ள தொடர், இந்திய கிரிக்கெட் அணிக்கு மிக மிக முக்கியமானதாகும்.

இதற்கு காரணம், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் இந்திய அணி முன்னேற வேண்டும் என்றால் இந்த தொடரை 3 - 0 என்ற கணக்கிலோ, 3 - 1 கைப்பற்ற வேண்டும் என்ற ஒரு மிகப்பெரிய நெருக்கடியும் உள்ளது. மறுபக்கம் கடந்த இரண்டு முறை நடந்த டெஸ்ட் தொடரிலும் ஆஸ்திரேலிய மண்ணில் அதே ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தி இந்திய அணி சாதனை புரிந்திருந்தது. அதற்கு பழி வாங்கவும் ஆஸ்திரேலிய அணி தீவிரமாக தயாராகிய சூழலில், இந்திய அணியும் வெற்றி பெற வேண்டும் என்பதால் நிச்சயம் இந்த தொடர் மிகுந்த விறுவிறுப்புடன் இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

Images are subject to © copyright to their respective owners

அப்படி ஒரு சூழலில், முதல் டெஸ்ட் போட்டி தற்போது நாக்பூர் மைதானத்தில் வைத்து ஆரம்பமாகி உள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி, ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களான வார்னர் மற்றும் உஸ்மான் கவாஜா ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். கவாஜா 1 ரன்னில் சிராஜ் பந்து வீச்சில் எல்பிடபுள்யூ ஆனார். அதே போல, வார்னரும் 1 ரன் மட்டுமே எடுத்த நிலையில், முகமது ஷமி பந்து வீச்சில் க்ளீன் போல்டு ஆனார். இதன் பின்னர், ஸ்மித் மாற்றும் மார்னஸ் ஆகியோர் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

இந்த நிலையில், இந்திய டெஸ்ட் அணியில் சூர்யகுமார் யாதவ் மற்றும் கே.எஸ். பரத் ஆகியோர் இந்த போட்டியின் மூலம் அறிமுகமாகி உள்ளனர். டி 20 போட்டியில் நம்பர் 1 வீரராக வலம் வரும் சூர்யகுமார் யாதவ், தற்போது டெஸ்ட் அணியிலும் இடம்பிடித்துள்ளார். டி 20 மற்றும் ஒரு நாள் போட்டியை போல, டெஸ்ட் போட்டிகளிலும் அவர் ஒரு ரவுண்டு வருவார் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

Images are subject to © copyright to their respective owners

சூர்யகுமாரை போல, டெஸ்ட் அணியில் அறிமுகமாகி உள்ள விக்கெட் கீப்பர் KS பரத், உள்ளூர் போட்டிகளில் அசத்தி தற்போது முதல் டெஸ்ட் போட்டியிலும் களமிறங்கி உள்ளார். இதனிடையே, பரத் அணியில் தேர்வானதும் அவரது தாய் மைதானத்திலேயே அவரை கட்டியணைத்துக் கொண்ட நிகழ்வு, கிரிக்கெட் ரசிகர்களை மனம் நெகிழ வைத்துள்ளது.

Images are subject to © copyright to their respective owners

அதே போல, சூர்யகுமார் மற்றும் பரத் ஆகியோரின் குடும்பத்தினர் மைதானத்திற்கு வருகை தந்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

KS BHARAT, SURYAKUMAR YADAV, IND VS AUS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்