'If your Bad,I am your Dad'...'தோனியி'டம் பல்பு வாங்கிய வீரர்...வைரலாகும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

மும்பை அணிக்கு எதிரான போட்டியின்போது தோனியை ‘மான்கட் முறையில் ’ அவுட் செய்ய முயற்சித்த க்ருனல் பாண்டியாவின் முயற்சி தோல்வியில் முடிந்தது.

நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடந்த போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின.முதலில் களம் இறங்கிய மும்பை அணி, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 170 ரன்கள் குவித்தது.சூர்யகுமார் யாதவ் 59 ரன்களும், க்ருனல் பாண்டியா 42 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.கடைசி நேரத்தில் அதிரடி காட்டிய ஹர்திக் பாண்டியா 8 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து அசத்தினார்.

அடுத்துக் களமிறங்கிய சென்னை அணி, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 133 ரன்கள் மட்டுமே எடுத்து 37 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.தொடர்ந்து வெற்றியை ருசித்து வந்த சென்னை அணிக்கு,மும்பை முற்றுப்புள்ளி வைத்தது.இதனிடையே சென்னை அணி பேட்டிங் செய்துகொண்டிருந்த போது க்ருனல் பாண்டியா வீசிய 14-வது ஓவரை ஜாதவ் எதிர்கொள்ள மறுமுனையில் தோனி இருந்தார்.

அப்போது பந்து வீசிய பாண்டியா,தோனி ரன் எடுக்க கிரீஸுக்கு வெளியே செல்வதாக நினைத்து  ‘மான்கட்’ முறையில் அவுட் செய்ய முயற்சித்தார்.ஆனால், தோனி வெளியே சென்றாலும் அவர் பேட் கிரீஸுக்கு உள்ளே இருந்ததால்,பாண்டியாவின் முயற்சி தோல்வியடைந்தது.இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது

MSDHONI, IPL2019, IPL, CHENNAI-SUPER-KINGS, CSK, MUMBAI-INDIANS, MI VS CSK, MANKAD, KRUNAL PANDYA

OTHER NEWS SHOTS

தொடர்புடைய செய்திகள்