‘ஏர்போர்ட்டில் தடுத்து நிறுத்தப்பட்ட’... ‘மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரர்’... காரணம் என்ன???... 'வெளியான பரபரப்பு தகவல்'...!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

துபாயில் இருந்து வந்த மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆல் ரவுண்டர் குர்னால் பாண்டியா, சந்தேகத்தின் பேரில் மும்பை ஏர்போர்ட்டில் அதிகாரிகளால் தடுத்து நிறுத்தி வைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய அணியின் நட்சத்திர ரீர் குர்னால் பாண்டியா. இவர் தனது சகோதரர் ஹர்திக் பாண்டியா உடன் இணைந்து ஐபிஎல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். ஐக்கிய அமீரகத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் ஓரளவுக்கு ஆட்டத்தை வெளிப்படுத்திய குர்னால் பாண்டியா, இறுதிப்போட்டியில் வின்னிங் ஷாட் அடித்து அணியை வெற்றிபெறச் செய்தார்.

இந்நிலையில் ஐபிஎல் தொடர் நிறைவடைந்ததால், ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ள இந்திய அணி வீரர்கள் மட்டும் அப்படியே அங்கிருந்து ஆஸ்திரேலியா செல்கின்றனர். மற்றவர்கள் சொந்த ஊர் திரும்பி கொண்டிருக்கின்றனர். ஆஸ்திரேலியா செல்லும் இந்திய அணியில் குர்னால் பாண்டியா இடம்பெறாததால் துபாயில் இருந்து மும்பை திரும்பி இருக்கிறார்.

மும்பை விமானத்தில் வந்திறங்கிய அவரை, வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். இந்த சம்பவம் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் ஏன் தடுத்து நிறுத்தப்பட்டார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகாமல் இருந்தன. தற்போது அந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

`அளவுக்கு அதிகமாக தங்க நகைகள் மற்றும் விலைமதிப்பு மிக்க பொருட்கள் நிறைய வைத்திருந்தார் என்பதால் சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்தப்பட்டார்' என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்