‘அண்ணன் வீசிய ஓவரில் தம்பி அவுட்’.. எப்பவும் ஆக்ரோஷமா கொண்டாடும் க்ருணால்.. இப்போ என்ன பண்ணார் தெரியுமா?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி வீழ்த்தி வெற்றி பெற்றது.

Advertising
>
Advertising

ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதன் 4-வது லீக் போட்டி நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ்அணியும் மோதின.

டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து பேட்டிங் செய்த குஜராத் அணி 19.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இப்போட்டியில் ஹர்திக் பாண்ட்யாவின் சகோதரர் க்ருணால் பாண்ட்யா லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் சார்பாக விளையாடினார். அப்போது அவர் வீசிய ஓவரில் மனிஷ் பாண்டேவிடம் கேட்ச் கொடுத்து ஹர்திக் பாண்ட்யா அவுட்டானார். வழக்கமாக விக்கெட் எடுத்தால் ஆக்ரோசமாக கொண்டாடும் க்ருணால் பாண்ட்யா, இந்த முறையும் எந்த வித பெரிய கொண்டாட்டமும் இல்லாமல் சிரித்துக்கொண்டே அமைதியாக இருந்தார். இது ரசிகர்களிடையே கவனம் பெற்று வருகிறது.

HARDIKPANDYA, IPL, KRUNALPANDYA, GTVLSG

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்