க்ருணால் பாண்ட்யாவுடனான மோதல்.. முதல்முறையாக மௌனம் கலைத்த தீபக் ஹூடா.. என்ன சொன்னார் தெரியுமா..?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

க்ருணால் பாண்ட்யாவுடன் ஏற்பட்ட மோதல் குறித்து தீபக் ஹூடா முதல்முறையாக பகிர்ந்துள்ளார்.

Advertising
>
Advertising

கடந்த ஆண்டு நடந்த சையத் முஷ்டாக் அலி தொடரில் பரோடா அணியில் க்ருணால் பாண்ட்யாவின் கேப்டன்சியில் தீபக் ஹூடா விளையாடினார். அப்போது க்ருணால் பாண்ட்யா தன்னை வேண்டுமென்றே மற்ற வீரர்கள் முன்பு திட்டுவதாகவும், தன் மீது மட்டும் பாரபட்சமாக நடந்துகொள்வதாகவும் கடிதம் மூலம் புகார் கூறியிருந்தார். ஆனால் தீபக் ஹூடாவின் புகாரின் அடிப்படையில் க்ருணால் பாண்ட்யா மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல், தீபக் ஹூடா அணியிலிருந்து நீக்கப்பட்டார்.

அதன்பின்னர் ஐபிஎல் தொடரிலும் அவர்களுக்கு இடையேயான மோதல் நீடித்தது. இந்த சூழலில், க்ருணால் பாண்ட்யா மற்றும் தீபக் ஹூடா ஆகிய இருவரையும் மெகா ஏலத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி எடுத்தபோது பரபரப்பு கிளம்பியது. ஆனால் இருவரும் எந்த பிரச்னையும் இல்லாமல் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் இருவரும், விக்கெட் கொண்டாட்டத்தின்போது கட்டிப்பிடித்துக் கொண்டனர். அந்த புகைப்படம் கிரிக்கெட் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், இதுகுறித்து தீபக் ஹூடா பேசியுள்ளார். அதில், ‘க்ருணால் பாண்ட்யா எனது சகோதரர் மாதிரி. சகோதரர்களுக்கு இடையே சண்டை நடப்பது சகஜம். நாங்கள் இருவரும் இப்போது லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி வெற்றி பெற வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்திற்காகத்தான் விளையாடுகிறோம்’ என தீபக் ஹூடா கூறியுள்ளார்.

KRUNAL PANDYA, DEEPAK HOODA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்