அதிரடி '50' போட்ட 'க்ருணால்'... அடுத்த சில நொடிகளில் நடந்த 'சண்டை'... 'அதிர்ச்சி'யுடன் பார்த்த 'கோலி'... பரபரப்பு 'வீடியோ'!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளிடையேயான முதல் ஒரு நாள் போட்டி தற்போது நடைபெற்று வரும் நிலையில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 317 ரன்கள் எடுத்தது.

தொடர்ந்து இலக்கை நோக்கி ஆடிய இங்கிலாந்து அணி, 251 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த நிலையில், இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முன்னதாக, இந்திய அணி தங்களது பேட்டிங்கின் தொடக்கத்தில் சற்று நிதானமாக ஆடினாலும், ஒரு பாதிக்கு பிறகு ஆட்டம் வேகம் எடுத்தது.


தொடக்க வீரர் ஷிகர் தவான் நூலிழையில் சதத்தை தவற விட்டு, 98 ரன்களில் அவுட்டானார். அதன் பிறகு, இறுதியில் கைகோர்த்த ராகுல் மற்றும் க்ருணால் பாண்டியா ஆகியோர், அதிரடியாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர்.

கடைசி 10 ஓவர்களில், இருவரும் சேர்ந்து 100 ரன்களுக்கு மேல் குவித்த நிலையில், தான் அறிமுகமான முதல் ஒரு நாள் போட்டியிலேயே, அரை சதமடித்து அசத்தினார் க்ருணால் பாண்டியா. அது மட்டுமில்லாமல், முதல் ஒரு நாள் போட்டியில், அதிவேகமாக அரை சதமடித்த (26 பந்துகள்) சாதனையையும் அவர் படைத்துள்ளார்.

இந்நிலையில், அதிரடி அரை சதத்தை க்ருணால் 49 ஆவது ஓவரில் எட்டிப் பிடித்த போது, அந்த ஓவரை வீசிய டாம் குர்ரானுடன் தகராறில் க்ருணால் பாண்டியா ஈடுபட்டார். டாம் குர்ரான் பந்தை அடித்து விட்டு, ஒரு ரன் ஓடி, பவுலர் எண்டு வந்த பாண்டியாவைப் பார்த்து, டாம் குர்ரான் ஏதோ கூறியுள்ளதாக தெரிகிறது.

 

இதனைக் கேட்டு கடுப்பான க்ருணால் பாண்டியா, உடனடியாக டாம் பக்கம் நடக்கத் தொடங்கினார். இதனைக் கண்ட போட்டி நடுவர், இருவரையும் சமாதானம் செய்ய முற்பட்டார். இருந்த போதும், க்ருணால் பாண்டியா கட்டுப்படாமல், தொடர்ந்து டாமிடம் கோபமாக பேசினார்.

 

அதன் பின்னர், இங்கிலாந்து வீரர் ஜோஸ் பட்லர், டாம் குர்ரான் அருகே சென்று அவரை சமாதானப்படுத்தினார். மேலும் இவை அனைத்தையும் வெளியே இருந்து கவனித்த இந்திய கேப்டன் கோலி, என்ன நடக்கிறது என தெரியாமல் அதிர்ச்சியில் பார்த்துக் கொண்டு இருந்தார்.

இது தொடர்பான வீடியோ, தற்போது இணையதளங்களில் அதிகம் பரவி, பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்