‘கோலி செல்போன் ஸ்விட்ச் ஆப்ல இருக்கு’.. பிசிசிஐக்கு என்னதான் வேணும்.. விராட்டின் இளம் வயது கோச் ‘பரபரப்பு’ குற்றச்சாட்டு..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

விராட் கோலி விவகாரத்தில் வெளிப்படைத்தன்மை வேண்டும் என அவரது இளம் வயது பயிற்சியாளர் குற்றச்சாட்டை வைத்துள்ளார்.

Advertising
>
Advertising

இந்திய டி20 அணிக்கான கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி சமீபத்தில் விலகினார். இதனை அடுத்து ரோகித் சர்மா புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டார். இந்த சூழலில் திடீரென ஒருநாள் கிரிக்கெட் அணிக்கான கேப்டன் பதவியில் இருந்தும் விராட் கோலி நீக்கப்பட்டு, ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனால் விராட் கோலி பிசிசிஐ மீது கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது இந்திய அணி வருகிற 6-ம் தேதி தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் விளையாட உள்ளது. அதற்காக இந்திய கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் பயோ பபுளில் இணைந்துள்ளனர். ஆனால் விராட் கோலி இதுவரை இதில் இணையவில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில் பிசிசிஐ மீது விராட் கோலியின் இளம் வயது பயிற்சியாளர் ராஜ்குமார் சர்மா கடும் குற்றச்சாட்டை வைத்துள்ளார். அதில், ‘விராட் கோலியின் செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. அவருடன் தற்போது வரை நான் பேசவில்லை. டி20 அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகுகிறேன் என்று அவர் கூறிய போதே, ஒருநாள் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுங்கள் என்று பிசிசிஐ வலியுறுத்தி இருக்க வேண்டும், அல்லது பதவி விலகாமல் தடுத்திருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால் இந்தப் பிரச்சினையே இப்போது வந்திருக்காது.

நான் கங்குலியின் விளக்கத்தை கேட்டேன். அதில் அவர் கோலியை டி20 அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலக வேண்டாமென வலியுறுத்தியதாக கூறியிருந்தார். ஆனால் அது குறித்து எனக்கு எந்தவித தகவலும் வரவில்லை. அவரது பதில் எனக்கு ஆச்சரியமாகவே உள்ளது.

கேப்டன்சி மாற்றம் குறித்து தேர்வுக்குழு அதிகாரிகள் இதுவரை எந்தவித விளக்கத்தையும் கொடுக்கவில்லை. பிசிசிஐக்கு என்னதான் வேண்டும் என்று தெரியவில்லை. இதில் வெளிப்படைத்தன்மை வேண்டும்’ என ராஜ்குமார் சர்மா கூறியுள்ளார்.

VIRATKOHLI, SOURAVGANGULY, BCCI, RAJKUMARSHARMA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்