அதெப்படி ‘அவுட்’ இல்லாம போகும்.. அம்பயருடன் ‘கடும்’ வாக்குவாதம்.. என்ன ஆச்சு கோலிக்கு..?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி அம்பயரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

ஐபிஎல் தொடரின் 52-வது போட்டி நேற்று ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் ஹைதராபாத் மற்றும் பெங்களூரு அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஹைதாராபாத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங் செய்த பெங்களூரு அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 120 ரன்களை எடுத்தது.

இதில் அதிபட்சமாக பிலிப்பி 32 ரன்களும், டிவில்லியர்ஸ் 24 ரன்களும், வாசிங்கட்ன் சுந்தர் 21 ரன்களும் எடுத்தனர். இதனை அடுத்து பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 14.1 ஓவர்களில் 121 ரன்கள் அடித்து அபார வெற்றி பெற்றது. ஹைதராபாத் அணியை பொருத்தவரை சாகா 39 ரன்களும், மனிஷ் பாண்டே 26 ரன்களும், ஜேசன் ஹோல்டர் 26 ரன்களும் அடித்தனர்.

இந்தநிலையில் இப்போட்டியின் 9-வது ஓவரை பெங்களூரு அணியின் சுழற்பந்து வீச்சாளர் சாஹல் வீசினார். அப்போது சாகா அடித்த பந்து சாஹலின் கையில் பட்டு எதிர் முனையில் உள்ள ஸ்டம்பில் அடித்தது. அந்த சமயம் கேன் வில்லியம்சன் வெளியே வந்திருந்தார். இதனால் இதை சாஹல் கோலியிடம் அவுட் என தெரிவித்தார்.

ஆனால் அம்பயர் இதற்கு அவுட் கொடுக்கவில்லை. இதனால் கோலி அம்பயரிடம் கோபமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் மூன்றாவது அம்பயரிடம் ரிவ்யூ சென்றது. அப்போது பார்த்தபோது பந்து ஸ்டம்பில் அடிப்பதற்குள் வில்லியம்சன் பேட்டை கிரீஸுக்குள் வைத்திருந்தது தெரியவந்தது.

அதேபோல் பெங்களூரு பந்துவீச்சாளர் உடானா வீசிய ஒரு பந்து கேன் வில்லியம்சனின் தலைக்கு நேராக வந்தது. அதை அவர் அடிக்க கேட்ச் ஆனது. ஆனால் இது நோபால் என பலரும் தெரிவித்தனர். ஆனால் இதை அம்பயர் நோபால் என தரவில்லை. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அம்பயரின் இந்த செயலை யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங் உள்ளிட்ட வீரர்கள் விமர்சனம் செய்திருந்தனர். ஆனாலும் கேன் வில்லியம்சன் அம்பயரிடம் எந்த வித வாக்குவாதமும் செய்யாமல் அமைதியாக சென்றார்.

இந்தநிலையில் மைதானத்தில் அம்பயரிடம் கோலி கோபமாக வாக்குவாதம் செய்ததை பலரும் சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர். முன்னதாக மும்பை அணிக்கு எதிரான போட்டியில் சூர்யகுமார் யாதவிடம் கோலி நடந்துகொண்ட விதம் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்