"இந்த தடவ 'கோலி' போட்டு வெச்சுருக்குற 'ஸ்கெட்சே' வேற.. என்ன நடக்கப் போகுதுன்னு மட்டும் பாருங்க.." எகிறும் 'எதிர்பார்ப்பு'.. பட்டையை கிளப்புமா 'இந்திய' அணி??
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி, கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்தின் சவுதாம்ப்டன் மைதானத்தில், ஜூன் மாதம் 18 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை இந்த போட்டி நடைபெறவுள்ள நிலையில், இதற்காக இந்திய கிரிக்கெட் அணி, நேற்று இங்கிலாந்து சென்றடைந்தது. அங்கே சில தினங்களுக்கு, இந்திய வீரர்கள் தனிமைப்படுத்தப்படவுள்ள நிலையில், அதன் பிறகே பயிற்சியை தொடங்கவுள்ளது.
இந்த போட்டிக்காக, இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் சம பலத்துடன் விளங்கும் நிலையில், முதல் டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை கைப்பற்ற நிச்சயம் இரு அணிகளும் முனைப்பு காட்டும் என்பதால், ஐந்து நாட்களும் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது. இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரரான ரீதிந்தர் சிங் சோதி (Reetinder Singh Sodhi), இந்திய அணி குறித்தும், கேப்டன் கோலி குறித்தும் சில கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.
'அனைவரும் கோலியை கோபமான இளைஞர் என்று கூறுகின்றனர். ஆனால், நான் அதில் ஒரு வார்த்தையை மட்டும் சேர்த்துக் கொள்ள நினைக்கிறன். கோபமான, பாசிட்டிவிட்டி எண்ணம் கொண்ட இளைஞர் என்பது தான் அது. ஏனென்றால், இந்திய அணி ஏன் நம்பர் 1 அணியாக இருக்கிறது என்பதை இந்த உலகுக்கு காட்ட வேண்டும் என விராட் கோலி விரும்புகிறார்.
நான் சொன்ன பாசிட்டிவிட்டியை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, இந்திய அணிக்குள் உருவாக்கி வைத்துள்ளார். இந்திய அணியின் செயல்திறன், தற்போது மிகவும் பேசப்பட்டு வருகிறது. இந்திய அணியில் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களும், உலகின் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் பேட்ஸ்மேன்களும் இருப்பதால், நாம் வலிமையாக உள்ளோம்.
போட்டிக்காக, இங்கிலாந்து கிளம்புவதற்கு முன்னர், எந்த விதத்திலும் நியூசிலாந்து அணிக்கு நாங்கள் குறைந்தவர்கள் அல்ல என்ற எண்ணத்தில் தான் விமானம் ஏறுவோம் என்றும், இல்லையெனில் விமானத்தில் ஏற வேண்டாம் என்றும் தனது அணியினரிடம் கோலி தெரிவித்திருந்தார். இந்த நேரத்தில், விராட் கோலி எவ்வளவு கவனத்துடன் உள்ளார் என்பதைத் தான் இது காட்டுகிறது.
இதனால், நியூசிலாந்து அணி கவனத்துடன் ஆட வேண்டியிருக்கும். இது மிகவும் பெரிய போட்டி, டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி. எனவே எந்த அணியால் நெருக்கடியை தாங்கிக் கொண்டு ஆட முடியுமோ, அந்த அணி வெற்றி பெற தான் அதிக வாய்ப்புள்ளது. மேலும், இந்திய அணி இதற்காக முழுவதும் தயாராக உள்ளது' என ரீதிந்தர் சிங் சோதி தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'கோலி' - 'அனுஷ்கா' வைத்த 'கோரிக்கை'.. "எவ்ளோ சொல்லியும் கேக்க மாட்டாங்க போல.." நெட்டிசன்களை கடுப்பாக்க வைத்த 'சம்பவம்'!!
- "'லைவ்'ல இருக்குறத மறந்து.. இப்படி 'டீம்' ரகசியத்த உளறி வெச்சுட்டீங்களே பாஸ்??.." கசிந்த 'கோலி' - 'ரவி சாஸ்திரி'யின் 'உரையாடல்'?!
- 'இந்திய' அணியை வைத்து 'ரவி சாஸ்திரி' போடும் 'மாஸ்டர்' பிளான்!.. "இப்டி எல்லாம் நடந்தா நிச்சயம் நம்ம வேற 'லெவல்' தான்!!"
- "இந்தியாக்கு அந்த 'பிளேயர்' எப்படியோ.. அந்த மாதிரி நம்ம 'டீம்'க்கும் ஒருத்தரு வேணும்.. அவர 'Copy' அடிச்சாச்சும் பெரிய ஆளா வாங்கப்பா.." ஏங்கிய 'பீட்டர்சன்'!!
- "என்ன இப்படி ஒரு 'பிளான்' பண்ணி 'இங்கிலாந்து' கிளம்பி போறீங்க??.." நினைக்கவே 'விசித்திரமா' இருக்கு.." 'கிழித்து தொங்க விட்ட 'முன்னாள்' வீரர்!!
- 'ரசிகரின்' கேள்விக்கு 'கோலி'யின் பதிலால் வெடித்த 'சர்ச்சை'.. குழம்பி நின்ற 'நெட்டிசன்கள்'.. தனது பாணியிலேயே பதில் சொன்ன 'கோலி'.. வைரலாகும் 'ட்வீட்'!!
- "இவர மாதிரி ஒரு 'ஜீனியஸ' கிரிக்கெட்'ல பாக்குறதே ரொம்ப 'அபூர்வம்'.." 'இந்திய' வீரரை தாறுமாறாக பாராட்டிய 'ரமீஸ் ராஜா'!!
- "இவர கண்டிப்பா 'டீம்'ல சேர்த்து இருக்கணும்.. 'இந்தியா' டீம் பண்ண தப்புக்கு கண்டிப்பா ஃபீல் பண்ணுவாங்க.." வருத்தப்பட்ட 'முன்னாள்' வீரர்!!
- "'ஃபைனல்ஸ்' ஆடுறது எல்லாம் சரி.. ஆனா, இந்த நெனப்புல மட்டும் ஆடுனீங்க.. அப்புறம் நீங்க தான் வருத்தப்படுவீங்க.." 'இந்திய' அணியை எச்சரித்த 'முன்னாள்' வீரர்!!
- "நீங்க எல்லாரும் அப்படியே நெனச்சுட்டு இருங்க.. 'கொஞ்ச' நாள்ல தெரியும்.. யாரு சொன்னது நடக்கப் போகுது'ன்னு??.." மொத்தமாக 'கிழித்து' தொங்க விட்ட 'சுனில் கவாஸ்கர்'!!