'என்னடா நடக்குது அங்க..?' கேப்டன் ஆகக் களமிறங்கும் ரோகித்… திடீர் லீவு போடும் கோலி..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய கிரிக்கெட் அணியின் ஒருநாள் மற்றும் டி20 ஃபார்மட்டுகளின் கேப்டனாக அறிவிக்கப்பட்டு உள்ளார் ரோகித் சர்மா. டி20 கேப்டன் பொறுப்பில் இருந்து மட்டுமே தான் விலகப் போவதாக விராட் கோலி அறிவித்திருந்த நிலையில், அவரை ஒருநாள் ஃபார்மட் கேப்டன்ஸியில் இருந்தும் நீக்கியுள்ளது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ தரப்பு. இது பல்வேறு சர்ச்சைகளுக்கும் விவாதங்களுக்கும் உள்ளாகி இருக்கிறது.

Advertising
>
Advertising

இந்நிலையில் அடுத்ததாக இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்ரிக்கா சென்று டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாட உள்ளது.  முதலில் டெஸ்ட் போட்டிகளுக்கான தொடர் தான் ஆரம்பமாக உள்ளது. வரும் 26-ம் தேதி மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டி தொடங்குகிறது.

டெஸ்ட் அணிக்கு விராட் கோலி, வழக்கம் போல கேப்டனாக களம் காண உள்ளார். இதில் அவர் பங்கேற்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரைப் போலவே ரோகித் சர்மாவும் டெஸ்ட் அணியில் இடம் பெற்றிருந்தார். ஆனால், காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் டெஸ்ட் தொடரிலிருந்து விலகி இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் அடுத்ததாக, 2022 ஜனவரி 19-ம் தேதி முதல் தொடங்கும் ஒருநாள் தொடரில் ரோகித், கேப்டனாக களம் காணுவார் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதில் மிகப் பெரிய அதிர்ச்சி என்னவென்றால், விராட் கோலி, ஒருநாள் தொடரில் பங்கேற்கப் போவதில்லையாம்.

கோலிக்கும் ரோகித்துக்கும் வெகு நாட்களாக அணிக்குள் பனிப் போர் நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக ரோகித்துக்கு ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் கேப்டன் பொறுப்புகள் கொடுக்கப்பட்டதில் கோலி தரப்புக்கு அந்தளவுக்கு திருப்தி இல்லை என்று சொல்லப்படுகிறது. இதன் காரணமாகவே, முதலில் ரோகித், டெஸ்ட் தொடரில் இருந்து விலகியதாக சொல்லப்பட்டது.

இந்நிலையில் கோலியும், எதிர்வரும் ஒருநாள் தொடரில், ரோகித் கேப்டனாக களமிறங்கப் போகும் முதல் தொடரில் விளையாடப் போவதில்லை என்று தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.

இதற்கு கோலிக்கு நெருக்கமான சொல்லும் காரணம், ‘வெகு நாட்களாக தன் குடும்பத்தையும் புதிதாக பிறந்த குழந்தையையும் விட்டு கோலி தள்ளி இருந்தார். இப்போது தான் அவருக்கு குடும்பத்துடன் இருக்க நேரம் கிடைத்துள்ளது. எனவே அவர் டெஸ்ட் தொடருக்குப் பின்னர் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம். அவரது குழந்தை பிறந்து ஓராண்டு ஆவதால் அதையும் கொண்டாட கோலி முடிவெடுத்திருக்கிறார்’ என்று சொல்கின்றனர்

ரோகித், டெஸ்ட் விலகல் குறித்தான செய்தி உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கோலியின் விடுப்பு குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

CRICKET, விராட் கோலி, ரோகித் சர்மா, VIRAT KOHLI, ROHIT SHARMA, CAPTAIN CONTROVERSY

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்