"அந்த ரெக்கார்ட் லிஸ்ட் எல்லாம் 'ரெடி' பண்ணி வைங்க..." மூணே 'மேட்ச்'ல 'சச்சின்', 'தோனி', 'ரோஹித்' 'சாதனை'ய காலி பண்ண காத்திருக்கும் 'கோலி'!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி, 3 ஒரு நாள் போட்டி, 3 டி 20 போட்டி மற்றும் 4 டெஸ்ட் போட்டிகளை விளையாடவுள்ளது.

முதல் ஒரு நாள் போட்டி, வரும் 27 ஆம் தேதியன்று சிட்னியில் நடைபெறவுள்ள நிலையில், இந்த தொடர் மூலம் இந்திய அணி கேப்டன் விராட் கோலிக்கு தோனி, சச்சின், ரோஹித் ஆகியோரின் சாதனைகள் சிலவற்றை ஆஸ்திரேலிய மண்ணில் முறியடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

ரோஹித் ஷர்மா இந்த தொடரில் இடம்பெறாமல் போன நிலையில், இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஒரு நாள் போட்டி தொடரில் அதிக சதமடித்துள்ள சச்சினின் சாதனையை விராட் கோலி முறியடிக்க வாய்ப்பு உருவாகியுள்ளது. சச்சின் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 9 சதங்கள் அடித்து முதலிடத்திலுள்ள நிலையில், கோலி, ரோஹித் ஆகியோர் 8 சதங்களுடன் அடுத்த இடங்களில் உள்ளனர்.

இந்த தொடரில் கோலி ஒரு சதமடித்தால் ரோஹித் சாதனையை முறியடிக்க முடியும். அதே வேளையில், மூன்று ஒரு நாள் போட்டிகளில் அவர் அதிரடியாக ஆடி இரண்டு சதங்கள் அடிக்கும் பட்சத்தில், சச்சினின் சாதனையை கூட முறியடிக்க வாய்ப்புண்டு. ஆஸ்திரேலியா அணி தரப்பில் ரிக்கி பாண்டிங் 6 சதங்களுடன் நான்காவது இடத்தில் உள்ளார்.

அதே போல கேப்டன்சியிலும் சாதனை ஒன்றை படைக்க விராட் கோலிக்கு வாய்ப்பு உருவாகியுள்ளது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக, ஒரு நாள் போட்டிகளில் அதிக வெற்றி பெற்ற இந்திய கேப்டன்களில் தோனி 14 வெற்றிகளுடன் முதலிடத்தில் உள்ளார். கோலி 11 வெற்றிகளுடன் உள்ள நிலையில், மூன்று ஒரு நாள் போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றால், தோனியின் சாதனையை கோலியால் சமன் செய்ய முடியும். இதனால், ஒரு நாள் போட்டித் தொடரில் கோலி இந்த சாதனைகளை படைப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்