"ரோஹித், கோலி".. ரெண்டு பேருக்கும் முதல் முறையா இப்படி ஒரு அவுட்.. ஒரே மேட்ச்ல நடந்த சம்பவம்!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதி வந்த இரண்டாவது டெஸ்ட் போட்டி முடிவுக்கு வந்துள்ளது. இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 263 ரன்களும், இந்திய அணி 262 ரன்களும் எடுத்திருந்தது.

                         Images are subject to © copyright to their respective owners

Advertising
>
Advertising

தொடர்ந்து ஒரு ரன் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி ஆரம்பத்தில் சிறப்பாக ரன் சேர்த்த படி இருந்தது. ஆனால் இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, ஆஸ்திரேலியாவை கதிகலங்க வைக்கும் வகையில் பவுலிங் செய்திருந்தார். கடைசி 28 ரன்களுக்குள் 8 விக்கெட்டுகளை ஆஸ்திரேலிய அணி இழந்த சூழலில் 113 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி இருந்தது. இந்திய அணி தரப்பில் ரவீந்திர ஜடேஜா 7 விக்கெட்டுகளையும், ரவிச்சந்திரன் அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றியிருந்தனர்.

தொடர்ந்து இந்த போட்டியில் 115 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கி இருந்த இந்திய அணி, நான்கு விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டிப் பிடித்திருந்தது. மேலும் இந்திய அணி தரப்பில் 10 விக்கெட்டுகளை எடுத்திருந்த ரவீந்திர ஜடேஜா ஆட்டநாயகன் விருது வென்றிருந்தார். முதல் போட்டியிலும் இவரே ஆட்ட நாயகனாக தேர்வாகி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Images are subject to © copyright to their respective owners

இந்நிலையில், இந்த டெஸ்ட் போட்டியில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகிய இருவர் செய்த விஷயம் தொடர்பான நிகழ்வு அதிகம் வைரலாகி வருகிறது. இந்த போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் ரோஹித் ஷர்மா ரன் அவுட்டாகி இருந்தார். இவர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ரன் அவுட் ஆவது இதுவே முதல் முறை. அதேபோல விராட் கோலியும் இந்த போட்டியில் ஸ்டம்பிங் முறையில் அவுட் ஆகி இருந்தார். அவர் முதல் முறையாக டெஸ்ட் போட்டியில் ஸ்டெம்பிங் முறையில் அவுட் ஆனதும் குறிப்பிடத்தக்கது.

Images are subject to © copyright to their respective owners

இப்படி விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகிய நட்சத்திர வீரர்கள் டெஸ்ட் போட்டியில் முதலாவதாக முறையே ஸ்டம்பிங் மற்றும் ரன் அவுட் ஆவது ஒரே போட்டியில் நிகழ்ந்துள்ளது பற்றி கிரிக்கெட் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்