'ஓப்பனிங் ஆடுவதற்கு முக்கிய தகுதி 'இது' தான்'!.. கோலி அட்வைஸ்!.. ரோகித் கேம் ப்ளான்!.. ஷுப்மன் கில்லுக்கு மட்டும் தெரிந்த சீக்ரெட்!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

கேப்டன் கோலி இளம் வீரர்களை எப்படி ஊக்கப்படுத்துகிறார் என்பது குறித்த திகைப்பூட்டும் கருத்தை ஷுப்மன் கில் வெளியிட்டுள்ளார்.

இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி வரும் ஜூன் 18 முதல் 22 வரை இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டனில் நடைபெறுகிறது.

இதற்கான விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஜூன் 2ம் தேதி இங்கிலாந்து கிளம்புகிறது. அதைத் தொடர்ந்து அங்கேயே இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா பங்கேற்கிறது. இதில் குறிப்பாக, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இத்தொடர்களுக்கான இந்திய அணியில் ரோஹித் சர்மா, சுப்மன் கில், மயங்க் அகர்வால், சத்தீஸ்வர் புஜாரா, விராட் கோலி (கேப்டன்), அஜின்க்ய ரஹானே (துணைக் கேப்டன்), ஹனுமா விஹாரி, ரிஷப் பண்ட், ரிதிமான் சாஹா, ரவிச்சந்திர அஸ்வின், ரவி்ந்திர ஜடேஜா, அக்ஷர் படேல், வாஷிங்டன் சுந்தர், ஜஸ்பிரித் பும்ரா, இசாந்த் சர்மா, முகமது ஷமி, முகமது சிராஜ், ஷர்துல் தாக்கூர், உமேஷ் யாதவ், கே.எல்.ராகுல் ஆகிய வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இதில், விக்கெட் கீப்பர் சாஹா கொரோனாவில் இருந்து மீண்டு வந்திருக்கும் நிலையில், ஆந்திராவைச் சேர்ந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் கேஎஸ் பரத் என்பவரையும் அணியில் சேர்த்துள்ளது பிசிசிஐ. 

அதுமட்டுமின்றி, தொடக்க வீரராக களமிறங்கவுள்ள சுப்மன் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. இந்தியாவுக்காக இதுவரை 7 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருக்கும் கில் 378 ரன்கள் எடுத்திருக்கிறார். ஆவரேஜ் 34.36. பெஸ்ட் ஸ்கோர் 91. மூன்று அரை சதங்கள் அடித்திருக்கிறார். எந்த அணிக்கு எதிராக விளையாடினாலும் அச்சப்படாமல், மிக நேர்த்தியாகவே ஷாட்ஸ்களை தேர்வு செய்து ஆடுவது இவரது பலம். அவர் அடித்த மூன்று அரைசதங்களும் ஸ்டைலிஷானவை. ஆனால், சதமாக கன்வெர்ட் செய்வதில் தான் தவற விட்டார். 

குறிப்பாக, கடந்த ஜனவரியில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில், ஆஸ்திரேலிய மண்ணிலேயே அந்நாட்டின் பவுலர்களை இடது கையால் டீல் செய்தார் எனலாம். 3 போட்டிகளில் 259 ரன்கள். பெஸ்ட் ஸ்கோர் 91. பேட்டிங் ஆவரேஜ் 51.80. அனைத்திலும் கிளாஸ் மற்றும் மாஸ் பேட்டிங்.

எல்லாவற்றையும் விட, தன் மேல் அவர் வைத்திருக்கும் அந்த நம்பிக்கை ஒவ்வொரு இன்னிங்ஸின் ஒவ்வொரு பந்திலும் பேசியது. தன்னால் சதம் அடிக்க முடியவில்லை என்றோ, தவறான ஷாட்ஸ் அடித்து அவுட்டாகிவிட்டோமே என்ற கவலையோ அவரிடம் துளியும் இல்லை. களத்தில் நிற்கும் வரை மகிழ்ச்சியாய் ஆடுகிறார். 

இந்த நிலையில், விராட் கோலி குறித்து பேசியுள்ள சுப்மன் கில், கேப்டன் விராட் கோலியுடன் நான் போட்டிகள் குறித்து பேசும்போதெல்லாம், என்னை அச்சமின்றி விளையாடச் சொல்வார். அவர் எண்ணங்கள் குறித்து நிறைய பேசுவார். பேட்டிங் செய்ய களத்திற்கு செல்லும் போது நல்ல மனநிலையில் இருக்க வேண்டும் என்ற அவரது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வார் என்றார். 

அதைத் தொடர்ந்து, ரோஹித் ஷர்மாவுடன் ஓப்பனிங் இறங்குவது குறித்து பேசிய சுப்மன் கில், நான் ரோஹித்துடன் பேட்டிங் செய்யும்போது, பந்து வீச்சாளர்கள் எங்கு பந்து வீசுவார்கள், அணியின் அப்போதைய நிலைமை என்ன, எப்போது ரிஸ்க் எடுக்க வேண்டும் என்பது குறித்து நாங்கள் விவாதிப்போம் என்றார். 

மேலும், நாங்கள் ஆஸ்திரேலியாவில் சிறப்பாகச் செயல்பட்டோம். வெளிநாடுகளில் சிறப்பாக விளையாடி வருகிறோம். ஒரு தொடக்க வீரராக, நீங்கள் இங்கிலாந்தில் மட்டுமல்ல, எந்த வெளிநாடாக இருந்தாலும், ஒவ்வொரு நிலையிலும் நீங்கள் விளையாட முடியும் என்று நான் நினைக்கிறேன்.

ஏனெனில், ஒவ்வொரு session-இலும் விளையாடுவது மிகவும் முக்கியம். இங்கிலாந்தில் மேகம் சூழும் போதெல்லாம், பந்து அதிகமாக ஸ்விங் ஆகும். சூரியன் வந்த போது, பேட்டிங் செய்வது எளிதாகிறது. ஒரு தொடக்க வீரராக அந்த நிலைமைகளை மதிப்பிடுவது முக்கியம் என்றார்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்