‘பாடி லாங்குவேஜ் சரியில்ல’!.. தோல்விக்கு காரணம் என்ன..? கேப்டன் கோலி சொன்ன விளக்கம்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் தோல்வி அடைந்ததற்கான காரணத்தை கேப்டன் விராட் கோலி விளக்கியுள்ளார்.

‘பாடி லாங்குவேஜ் சரியில்ல’!.. தோல்விக்கு காரணம் என்ன..? கேப்டன் கோலி சொன்ன விளக்கம்..!

இந்தியா-இங்கிலாந்துக்கு இடையேயான 3-வது டி20 போட்டி நேற்று அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் ஷர்மா மற்றும் கே.எல்.ராகுல் களமிறங்கினர். இதில் கே.எல்.ராகுல் டக் அவுட்டாகி வெளியேற, அடுத்த வந்த இளம்வீரர் இஷான் கிஷனும் 4 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார்.

Kohli slams India's body language while fielding in the 3rd T20I

இதனை அடுத்து களமிறங்கிய கேப்டன் விராட் கோலி, ரோஹித் ஷர்மாவுடன் ஜோடி சேர்ந்து அதிரடியாக ஆட ஆரம்பித்தார். இதில் ரோஹித் ஷர்மா 15 ரன்களில் அவுட்டாக, அடுத்ததாக விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த களமிறங்கினார். விராட் கோலி-ரிஷப் பந்த் ஜோடி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 25 ரன்கள் எடுத்திருந்தபோது ரிஷப் பந்த் எதிர்பாராதவிதமாக ரன் அவுட்டாகி வெளியேறினார்.

Kohli slams India's body language while fielding in the 3rd T20I

இதனால் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 156 ரன்களை இந்தியா எடுத்தது. இதில் அதிகபட்சமாக கேப்டன் கோலி 77 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இங்கிலாந்து அணியைப் பொறுத்தவரை மார்க் வுட் 3 விக்கெட்டுகளும், கிறிஸ் ஜோர்டன் 2 விக்கெட்டுகளும் எடுத்தனர்.

இதனைத் தொடர்ந்து 157 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இங்கிலாந்து அணி, 18.2 ஓவர்களில் 158 ரன்கள் அடித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக ஜாஸ் பட்லர் 83 ரன்களும், ஜானி பேர்ஸ்டோ 40 ரன்களும் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இந்த நிலையில் போட்டி முடிந்தபின் பேசிய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, ‘இரண்டாவது பாதியில் ஆட்டத்தில் ஆதிக்கத்தை செலுத்த நினைத்தோம். அதனால் பீல்டிங்கில் தீவிரம் காட்ட முயற்சித்தோம். ஆனால் அதில் தோற்றோம். எங்களது பாடி லாங்குவேஜ் சரியில்லை என நான் கருதுகிறேன். இந்த ஆட்டத்தில் டாஸ் முக்கிய பங்கு வகித்தது. ஆனாலும் டாஸை இழந்த பிறகு அதற்கு ஏற்றபடி நாம் விளையாட வேண்டியுள்ளது. புதிய பந்தில் விளையாடுவது சற்று சவாலான காரியம். பேட்டிங்கில் பார்ட்னர்ஷிப் அமைக்க தவறி விட்டோம். ஒரே ஒரு சின்ன பார்ட்னர்ஷிப் தான் அமைக்க முடிந்தது’ என அவர் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்