"இன்னும் பல வருசத்துக்கு நின்னு பேசும்".. கோலி அடிச்ச அந்த ஒரு 'சிக்ஸ்'.. ஐசிசி கொடுத்த வேற லெவல் கவுரவம்!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுடி 20 உலக கோப்பை சமீபத்தில் முடிவடைந்திருந்த நிலையில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றிருந்தது.
பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் இறுதி போட்டிக்கு முன்னேற்றம் கண்டிருந்தது. இதில், 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்ற பெற்று இரண்டாவது முறையாக டி 20 உலக கோப்பையை கைப்பற்றி அசத்தி இருந்தது.
கடந்த ஆண்டு நடைபெற்ற டி 20 உலக கோப்பைத் தொடரில் லீக் சுற்றுடன் வெளியேறி அதிர்ச்சி அளித்திருந்த இந்திய அணி, இந்த முறை கோப்பையை வெல்லும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது. ஆனால், இங்கிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் தோல்வி அடைந்த இந்திய அணி வெளியேறி ஏமாற்றம் அளித்திருந்தது.
இந்திய அணியின் தோல்விக்கான காரணம் குறித்தும் கிரிக்கெட் பிரபலங்கள் மற்றும் நிபுணர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். ஆனால், அதே வேளையில், உலக கோப்பை தொடருக்கு முன்பாக அதிக விமர்சனங்களை சந்தித்து வந்த விராட் கோலி, அனைவருக்கும் தனது அசத்தலான பேட்டிங்கால் பதில் சொல்லி இருந்தார். மொத்தம் 6 போட்டிகளில் ஆடி இருந்த விராட் கோலி, 4 அரை சதங்களுடன் 296 ரன்கள் குவித்ததுடன் டி 20 உலக கோப்பை தொடரில் அதிக ரன் எடுத்தவர்கள் பட்டியலிலும் முதலிடத்தில் இருந்தார்.
அதிலும் குறிப்பாக, பாகிஸ்தான் அணிக்கு எதிராக நடந்த முதல் போட்டியில் கோலியின் பேட்டிங் பலரையும் திரும்பி பார்க்க வைத்திருந்தது. இந்திய அணியின் வெற்றிக்கு கடைசி 8 பந்துகளில் 28 ரன்கள் தேவைப்பட, விக்கெட்டுகள் சென்ற போதும் 3 சிக்ஸர்களை பறக்க விட்டு நெருக்கடியை குறைத்திருந்தார் விராட் கோலி. இதனால், இந்திய அணி கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்றிருந்தது. கடைசி வரை களத்தில் இருந்த கோலி, 82 ரன்கள் எடுத்து அசத்தி இருந்தார்.
மேலும், இந்த டி 20 உலக கோப்பை தொடரில் சிறந்த போட்டி இது தான் என்றும் பலர் குறிப்பிட்டு வந்தனர். அப்படி ஒரு சூழலில், பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் கோலி அடித்த சிக்ஸிற்கு ஐசிசி கொடுத்த அங்கீகாரம், கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது.
ஹாரிஸ் ராஃப் வீசிய 19 ஆவது ஓவரில் வேகமாக வந்த ஷார்ட் பாலை நேராக சிக்சருக்கு அனுப்பி மைதானத்தில் இருந்தவர்கள் மட்டுமில்லாமல் அனைவரையும் திகைக்க வைத்திருந்தார் விராட் கோலி. இப்படி ஒரு சிக்ஸ் அடிப்பதற்கு வாய்ப்பே இல்லை என்ற நிலையில், ஷார்ட் பந்தை அத்தனை அழகாக நேராக சிக்ஸ் ஆக மாற்றி இருந்தார் கோலி. இதில் இருந்து போட்டியும் மாறி இருந்தது.
அப்படி ஒரு சூழலில், ஹாரிஸ் ராஃப் பந்தில் கோலி அடித்த சிக்ஸை "எல்லா காலத்திலும் மிகச் சிறந்த சிங்கிள் டி 20 ஷாட்" என ஐசிசி குறிப்பிட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- சந்தேகமா?.. விராட் கோலி மேலயா?.. ICC பகிர்ந்த தெறி வீடியோ.. குளிர்ந்து போன கோலி ரசிகர்கள்..!
- உலகக் கோப்பை வென்ற இங்கிலாந்து.. கேப்டன் பட்லருக்கும் தோனிக்கும் இப்படி ஒரு கனெக்சன் இருக்கா? செம்ம
- உலகக் கோப்பையை வென்ற இங்கிலாந்து.. வாழ்த்திய விராட் கோலி..! என்ன சொல்லிருக்காரு.? T20 Worldcup Final
- பாகிஸ்தானை வீழ்த்தி உலகக் கோப்பையை தட்டி தூக்கியது இங்கிலாந்து.. 2வது முறையாக சாம்பியன்.. பரபரப்பான T20 WORLD CUP 2022
- T20 World Cup : Semi Finalsல.. இந்தியாவுக்காக கடைசியா விக்கெட் எடுத்தது கோலி தானா??.. ட்ரெண்ட் செய்யும் ரசிகர்கள்!!
- தோல்வி அடைந்த இந்திய அணி... Retirement குறித்து சுனில் கவாஸ்கர் சொன்ன பரபரப்பு கருத்து!!
- இறுதிப்போட்டியில் பாகிஸ்தான், இங்கிலாந்து.. இது நிஜமாவே 1992 ஸ்க்ரிப்ட் தான் போலயே.. என்ன இவ்வளவு கனெக்ஷன்ஸ் இருக்கு?..
- சோகத்தில் இருந்த ரோஹித்.. தட்டிக் கொடுத்த டிராவிட்.. அதன் பிறகு நடந்த சம்பவம்.. மனம் உடைந்த ரசிகர்கள்!!
- INDIA VS ENGLAND: கண்கலங்கியபடி வெளியேறிய விராட் கோலி.. ரசிகர்களின் நெஞ்சை நொறுக்கிய வீடியோ..!
- T 20 World Cup 2022 : கேப்டன்கள் எடுத்த செல்ஃபி.. Semi Finals வர டீம் பத்தி அப்பவே இருந்த 'செம' கனெக்ஷன்!!