“ரசிகர்கள் அத மட்டும் மறக்கவே மாட்டாங்க”… தோனி முடிவுக்குப் பிறகு கோலி பகிர்ந்த வைரல் pic!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

சி எஸ் கே அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து தோனி விலகியுள்ளது ரசிகர்களுக்கு அதிர்ச்சியான முடிவாக அமைந்துள்ளது.

Advertising
>
Advertising

சென்னை சூப்பர் கிங்ஸின் தாக்கம்…

இதுவரையிலான ஐபிஎல் தொடரில் ஆதிக்கம் செலுத்தும் ஒரு அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இருந்து வருகிறது. இதுவரை 4 முறை கோப்பையைக் கைப்பற்றியுள்ள அந்த அணிக்கு தோனி கேப்டனாக செயல்பட்டு வந்தார். ஐபிஎல்-ன் முதல் தொடரில் இருந்து ஒவ்வொரு அணிக்கும் கேப்டன்கள் மாறிக்கொண்டிருக்க, சிஎஸ்கே அணிக்கு 12 ஆண்டுகளாக கேப்டனாக தோனி மட்டுமே இருந்து வந்தார். இந்நிலையில், தற்போது தோனி கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். ஆனால் அணிக்குள் ஒரு வீரராக தொடர்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தோனியிடம் ஜடேஜாவுக்கு கேப்டன்ஷிப்…

சென்னை அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவராக திகழ்ந்துவரும் ஜடேஜா இதுவரையில் 200 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி, 2386 ரன்களை குவித்துள்ளார். பவுலிங்கிலும் மிரட்டும் ஜடேஜா இதுவரையில் ஐபிஎல் தொடரில் 127 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் சென்னை அணிக்காக ஜடேஜா விளையாடி வருகிறார். இந்த ஆண்டு தோனியை விட அதிக தொகைக்கு இவர் தக்க வைக்கப்பட்டார். கேப்டன்சி பொறுப்பு பற்றி பேசியுள்ள அவர் ‘என் கூட தோனி இருக்கார். எனக்கு எந்த சந்தேகமா இருந்தாலும் அவரிடம் செல்வேன். அதனால் எந்த அழுத்தமும் இல்ல’ எனக் கூறியுள்ளார்.

ஜடேஜாவுக்கு குவியும் வாழ்த்து

கேப்டன்சி பொறுப்பைப் பெற்றுள்ள ஜடேஜாவுக்கு சக வீரர்கள் பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். சென்னை அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா முதல் மூத்த வீரர் கவாஸ்கர் வரை ஜடேஜா கேப்டனாக நியமிக்கப்பட்டது சரியான முடிவு எனக் கூறியுள்ளனர். இதையடுத்து இந்த ஆண்டு ஜடேஜா தலைமையில் சென்னை அணி எப்படி விளையாடப் போகிறது என்ற ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

கோலி பகிர்ந்த புகைப்படம்…

இந்திய அணியின் முன்னாள் கேப்டனான கோலி, தோனி கேப்டன் பொறுப்பில் இருந்து விலகியுள்ளது குறித்து தனது கருத்தைப் பகிர்ந்துள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தோனியைக் கட்டி அணைத்தவாறு இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ள அவர் ‘ மஞ்சள் உடையில் லெஜண்ட்ரியான கேப்டன்ஷிப். உங்கள் கேப்டன்சி அத்தியாயத்தை ரசிகர்கள் எப்போதும் மறக்க மாட்டார்க. எப்போதும் மரியாதை’ என உணர்ச்சிப் பூர்வமாக கூறியுள்ளார்.

MSDHONI, KOHLI, DHONI, IPL2022, CSK

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்