‘இப்ப அவங்களுக்கு நம்ம ரெண்டு பேரோட...’ ‘எங்களோட திறமை மேல நம்பிக்கை இருந்துச்சு..’. மைதானத்தில் நாங்கள் பேசிக்கொண்டே இருந்தோம்...!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய ஆஸ்திரேலிய அணிகள் மோதிய மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. தொடரின் முதலாவது போட்டியில் இந்திய அணி மோசமான தோல்வியை சந்தித்திருந்த நிலையில், அடுத்தடுத்து இரு போட்டிகளில் வெற்றிபெற்று இந்திய அணி கெத்துக் காட்டியுள்ளது.
நேற்றைய ஆட்டம் இரு அணிகளுக்கும் முக்கியம். சவாலான இலக்கை சேஸ் செய்ய வேண்டிய நெருக்கடி இந்திய அணிக்கு இருந்தது. தொடக்க ஆட்டக்காரரான தவான், காயம் காரணமாக பேட்டிங் செய்ய களமிறங்கவில்லை. மீண்டும் தொடக்க ஜோடியில் மாற்றம். ரோஹித்துடன் ராகுல் களமிறங்கினார். இந்தச் சூழலில் கூலாக விளையாடிய ரோஹித் சதமடித்து இந்திய அணி வெற்றி பெற முக்கிய காரணமாக இருந்தார்.
இந்திய அணியின் கேப்டன் கோலி, இந்தத் தொடரின் நாயகனாக அறிவிக்கப்பட்டார். தொடரைக் கைப்பற்றிய பிறகு பேசிய விராட், ``நாங்கள் அனுபவம் வாய்ந்த அணிதான். ஆனாலும் தவானின் அனுபவத்தை இந்தப் போட்டியில் நாங்கள் மிஸ் செய்தோம். ராகுல் ஆட்டமிழந்தது கொஞ்சம் மோசமான நிலையை ஏற்படுத்தியது, ஆனால், நல்ல தொடக்கம் கிடைத்திருந்தது என்பதை மறுக்க முடியாது.
எங்கள் பார்டனர்ஷிப்பின் முக்கியத்துவம் குறித்து நானும் ரோஹித்தும் பேசிக்கொண்டிருந்தோம். `ஆஸ்திரேலிய அணிக்கு தேவை எல்லாம் நம் இருவரின் விக்கெட்டுகள்தான். நாம் இருவரும் விக்கெட்டை இழக்காமல் பார்ட்னர்ஷிப் உருவாக்கினால், இறுதியில் ஓவருக்கு 7-8 ரன்கள் தேவைப்பட்டாலும் எளிதாக எடுத்துவிடலாம்’ எனப் பேசிக்கொண்டோம். எங்களின் திறன் மீது நம்பிக்கை இருந்தது. ரோஹித் இந்தப் போட்டியில் மிகச் சிறப்பாக விளையாடினார். எனக்கு முன்பாக அவர் ஆட்டத்தைக் கையில் எடுத்துவிட்டார். எங்கள் இருவரில் ஒருவர் இறுதிவரை நின்று ஆட வேண்டும்.
ஆஸ்திரேலிய அணி கடந்த முறை இருந்ததைவிட இந்த முறை கூடுதல் பலத்துடன் இருந்தது. ஸ்மித், வார்னர், லபுசாங்கே என பேட்டிங் லைன் கூடுதல் பலத்துடன் களம் கண்டது. பந்துவீச்சும் மிகத் தெளிவாக இருந்தது. ஃபீல்டிங் அபாரமாக இருந்தது. இவை அனைத்தையும் எதிர்கொண்டுதான் ஆஸ்திரேலியாவை வீழ்த்த முடியும்” என்றார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- தூங்குறப்ப தான் அவங்க 'ரெண்டு' பேரும் பிரிவாங்க... முன்னணி வீரர்களைக் 'கிண்டலடித்த' கேப்டன்!
- அந்த 'ரெண்டு' பேரும் இல்லேன்னா... ஆஸ்திரேலியாவ 'ஜெயிக்கறது' ரொம்ப கஷ்டமாச்சே... என்ன பண்றது? கடும் 'சிக்கலில்' கோலி!
- 'சச்சின்' சாதனையை முறியடித்த 'ரோஹித்'... ஓபனிங் பேட்ஸ்மேனாக '7,000 ரன்கள்'... அதிரடி நாயகனின் கலக்கல் 'சாதனை'...
- ‘டெஸ்ட்டில் தொடர்ந்து 21 மெய்டின் ஓவர்’.. உலக சாதனை படைத்த இந்திய ஆல்ரவுண்டர் உயிரிழப்பு..!
- ‘கடைசி 5 ஓவர்தான் எங்க டார்கெட்’.. ‘நாங்க ப்ளான் பண்ண மாதிரியே நடந்துச்சு’.. வெற்றி சீக்ரெட் சொன்ன ராகுல்..!
- 'விலா எலும்பை பதம் பார்த்த பவுன்சர்'... 'கவலையில் ரசிகர்கள்'... அடுத்த போட்டியில் விளையாடுவாரா?
- 'பழிவாங்கப்படுகிறாரா தோனி?!'... 'என்ன நடக்கிறது?'... 'ரசிகர்கள் ஆதங்கம்!'...
- போட்டிக்கு நடுவே... திடீர் திடீர் என 'காணாமல்' போன வீரர்கள்... என்ன ஆச்சு? ரசிகர்கள் கவலை!
- கடவுளே! இந்த ரெண்டு பேரோட 'லவ்' ஸ்டோரிக்கு... ஒரு 'எண்டு' கார்டு இல்லையா?... கதறும் ரசிகர்கள்!
- ஆஸ்திரேலியாவ 'ஜெயிச்சதெல்லாம்' சரிதான்... ஆனா இந்த ஒரு விஷயத்தை... 'நோட்' பண்ணீங்களா?