'அவர்மீது நம்பிக்கை வைத்த விராட் கோலி'... 'மறைமுகமாக தாக்கிய முன்னாள் வீரர்'!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

தமிழக வீரரான விஜய் சங்கர் மீது தனக்கு அதிக நம்பிக்கை இருக்கிறது என்று இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரானப் போட்டியில், தனது முதல் பந்திலேயே விஜய் சங்கர் விக்கெட் வீழ்த்தி அசத்தினார். இருப்பினும், தொடர்ந்து ஆப்கான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரானப் போட்டிகளில், அவர் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தாததால், அவர்மீது விமர்சனம் எழுந்தது.

இந்நிலையில் கேப்டன் விராட் கோலி, விஜய் சங்கர் சிறப்பான பெரிய ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று மிகுந்த நம்பிக்கையுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார். இதனால் இங்கிலாந்துக்கு எதிரான இன்றையப் போட்டியில், விஜய் சங்கரே களமிறக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, விஜய் சங்கரை அவசரப்பட்டு அணியில் இருந்து நீக்க வேண்டாம் என இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான கெவின் பீட்டர்சன் நக்கலாக தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் ட்வீட் செய்துள்ளார். அதில், 'அன்புள்ள விராட் மற்றும் ரவி சாஸ்திரி அவர்களே, தயவு செய்து விஜய் சங்கரை அணியிலிருந்து நீக்கிவிடாதீர்கள். இங்கிலாந்துக்கு எதிரான நாளையப் போட்டியை இந்திய அணிக்கு விஜய் சங்கர் வென்று கொடுப்பார் என்று நினைக்கிறேன். ரிஷப் பண்ட்டை அணியில் எடுப்பது குறித்து யோசிக்க வேண்டாம்' என்று பீட்டர்சன் ஆலோசனை தெரிவித்துள்ளார்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்